
கடந்த இரு தினங்களாக டிவிட்டர் பதிவுகளில் ஒரு வீடியோ வைரலானது. அதில், கிறிஸ்துவர்கள், ஓர் இந்துக் கோயிலின் முன் ஜமுக்காளம் விரித்து, அங்கே ஜபம் செய்வதும் ஜெபக் கூட்டம் நடத்துவதும், அதை தட்டிக் கேட்கும் கோயில் பூசாரியை கேவலமான வார்த்தைகளால் திட்டுவதும் என காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் டிவிட்டர்வாசிகள், ஆந்திரத்தில் நடக்கும் கிறிஸ்துவர்களின் அராஜகங்களைக் குறித்தும், அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஏழுமலையையும் கிறிஸ்துவ மயமாக்க ஆந்திரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த ஜகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மூலம் கிறிஸ்துவ அமைப்புகள் முயன்றதையும், ஆனால் ஏழுமலையான் கோபத்தில் அதே ஏழுமலைகளின் சஹ்யாத்ரி குன்றுகளில் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அதில் அவர் மரணித்ததும் ஆந்திர மக்களிடம் இன்றும் சிலிர்ப்புடன் சொல்லப் படும் கதையாகிவிட்டது.
ஆனால் பின்னர் அவரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர அரசியலை முன்னெடுத்து விஜயவாடா, திருப்பதி என பாத யாத்திரை சென்று, தன்னை இந்து ஆன்மிகவாதியாகவே காட்டிக் கொண்டு மக்களிடம் வாக்குகளைக் கவர்ந்தார்.

இருப்பினும், மதம் மாறி, பைபிள் புத்தகத்துடன் உலாவரும் ஜெகன் மோகனின் தாயாரும், கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்திட்டத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு உலாவரும் ஜெகன் மோகனும் இப்போது ஆந்திரப் பிரதேசத்தில் அமைதியின்மையை உருவாக்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு மதம் மாறிய புதிய கிறிஸ்துவ முதல்வரின் நிர்வாகத்தின் கீழ், ஆந்திராவில் கோயில்கள் தாக்கப்பட்டு அதில் உள்ள வழிபடு விக்ரஹங்கள் சேதமடைந்தன!
1) 14.11.2019 – குண்டூரில் உள்ள துர்கா கோவிலில்.
2) 21.01.2020 – பிதாபுரத்தில் உள்ள அனுமன் கோயில்
3) 11.02.2020 – ரோம்பிசெர்லாவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில்
4) 13.02.2020 – உண்ட்ராஜவரத்தில் உள்ள ஒரு கோவிலின் பிரதான நுழைவாயில்
5) 14.02.2020 – பித்ரகுந்தாவில் (நெல்லூர் மாவட்டம்) பாலாஜி சுவாமியின் தேர் எரிக்கப்பட்டது
6) 06.09.2020 – லட்சுமி நரிசிம்ஹ சுவாமியின் தேர் அந்தர்வேதியில் எரிக்கப்பட்டது
7) 13.09.2020 – துர்கா தேவியின் தேரில் இருந்து வெள்ளி சிங்கங்கள் திருடப்பட்டன
8) 15.09.2020 – நிடமனூரில் (கிருஷ்ணா மாவட்டம்) சாய்பாபா சிலை சேதமடைந்தது
9) 16.09.2020 – எலேஸ்வரத்தில் அனுமன் சிலை சேதமடைந்தது
10) 16.09.2020 – குண்டூர் மாவட்டத்தின் குண்ட்லபாடு அருகே தெய்வச் சிலைகள் சேதமடைந்தன
11) 17.09.2020 – மக்காபேட்டில் (கிருஷ்ணா மாவட்டம்) நந்தி சிலை சேதமடைந்தது
12) 19.09.2020 – சிந்தப்பள்ளியில் (விசாகப்பட்டினம் மாவட்டம்) சிவன் சிலைகள் சேதமடைந்தன
13) 20.09.2020 – நரசபுரம் (மேற்கு கோதாவரி மாவட்டம்) அருகே ஐயப்ப சுவாமியின் புகைப்பட பிரேம்கள் சேதமடைந்தன.
14) 23.09.2020 – பாத்திகொண்டாவில் (கர்னூல் மாவட்டம்) அனுமன் சிலை சேதமடைந்தது
15) 25.09.2020 – நாயுடு செல்லம் (நெல்லூர் மாவட்டம்) அருகே அனுமன் சிலை சேதமடைந்தது
16) 05.10.2020 – மந்திராலயம் (கர்னூல் மாவட்டம்) அருகே நரிசிம்ஹ சுவாமி சிலை சேதமடைந்தது.
17) 06.10.2020 – அடோனி (கர்னூல் மாவட்டம்) இல் அனுமன் சிலை சேதமடைந்தது
18) 06.10.2020 – நரசராவ் செல்லத்தில் (குண்டூர் மாவட்டம்) கோடஸ் சரஸ்வதி சிலை சேதமடைந்தது.
19) 17.10.2020 – ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோயிலின் பிரதான நுழைவாயில் சேதமடைந்தது (தர்லபாடு)
20) யானம் (கிழக்கு கோதாவரி மாவட்டம்) அருகே அனுமன் சிலை சேதமடைந்தது
21) விசைநகரத்தில் ஸ்ரீ ராமர் சிலை சேதமடைந்தது
22) ராஜமுந்திரியில் கார்த்திகேயா சிலை சேதமடைந்தது.
இன்னும் சில கோயில்களில் மாமிசங்களை வீசி, அசிங்கப் படுத்தி, அசுத்தப் படுத்தி உள்ளூர் மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, கொந்தளிப்பில் சிலர் ஆழ்த்தியுள்ளனர்.
இத்தனை இருந்தும், ஜெகன் திருப்பதிக்கு அவ்வப்போது விசிட் அடிப்பதும், விசாகப் பட்டினத்தில் உள்ள சங்கராசாரியரை ஸ்பெஷல் தர்ஷன் முடித்து வருவதும் அது தொடர்பான படங்கள் செய்திகளை ஊடகங்களில் பரப்ப விட்டு, தாம் இந்து மதத்துக்கு ஆதரவானவன் என்று காட்டிக் கொண்டிருப்பதும் ஆந்திரத்தில் இப்போது பெரும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.
தான் மட்டுமே சாமியாரையும் சாமியையும் தரிசித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது, இது போன்று தாக்குதலுக்கு உள்ளாகும் ஆலயங்களின் எண்ணிக்கையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், இதைச் செய்யும் நபர்களைக் கண்டறிந்து உடனடி தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கோருகின்றார்கள் ஆந்திர மக்கள்.