fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2026பகுதி 1

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கால்பந்துத் திருவிழா தொடங்கியுள்ளது.  இந்த 2026 பீஃபா உலகக்கோப்பை (2026 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து கோப்பையின் 23-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியாகும்.

இந்தப் போட்டி 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி மூன்று நாடுகளால் நடத்தப்படும் முதல் பீஃபா உலகக் கோப்பையாகவும், முன்பு 32ஆக இருந்த அணிகளின் எண்ணிக்கை இந்த முறை 48ஆக உயர்ந்து, தற்போது 48 அணிகளை உள்ளடக்கிய முதல் போட்டியாகவும் இருக்கும்.

2002 ஆண்டிற்குப் பிறகு பல நாடுகள் இணைந்து நடத்தும் முதல் ஆண்கள் உலகக் கோப்பை இதுவாகும். இதற்கு முன்னர் 1970, 1986 போட்டிகளை நடத்தியதன் மூலம், ஆண்கள் உலகக் கோப்பையை மூன்று முறை நடத்தும் அல்லது இணைந்து நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறும்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதற்கு முன்னர் 1994இல் அமெரிக்கா ஆண்கள் உலகக் கோப்பையை நடத்தியது. இதற்கு மாறாக, கனடா ஆண்கள் போட்டியை நடத்துவது அல்லது இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பை நவம்பர், திசம்பர் மாதங்களில் தனித்துவமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு அதன் பாரம்பரிய வட அரைக்கோள கோடைக்கால அட்டவணைக்குத் திரும்புகிறது.

போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால், கனடா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அனைத்தும் தானாகவே தகுதி பெற்றன. கேப் வர்டி, குராசோ, ஜோர்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் தங்களது முதல் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கின்றன. 2022இல் தனது மூன்றாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்ற அணி அர்ஜென்டினா அணியாகும்.

இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் பந்து சிறப்புத் தன்மைகள்

இந்தஉலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பந்தின் பெயர் ‘ட்ரையோண்டா’ (Trionda) ஆகும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு (AI) சென்சார் – பந்தின் நடுவே 500 HZ மோஷன் சென்சார் சிப் (IMU) பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு நொடிக்கு 500 முறை துல்லியமான தகவல்களை (வேகம், சுழற்சி, உதைக்கப்பட்ட நேரம்) வழங்கி, ‘ஆஃப்சைட்’ மற்றும் கோல் தொடர்பான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

சார்ஜ் செய்யும் வசதி: இந்த பந்து ஒரு மின்னணு சாதனம் போல செயல்படுவதால், ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக இதற்கு சார்ஜ் செய்யப்பட வேண்டும்.

புதிய வடிவமைப்பு: உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாக, 4 பேனல்கள் (Panels) மட்டுமே இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறப்பு அமைப்பு: பந்தில் உள்ள ஆழமான பள்ளங்கள், அது காற்றில் நிலையாகப் பறக்க உதவுகின்றன. மேலும், வீரர்கள் பந்தை அதிகளவில் சுழற்றவும் (Spin) இது வழிவகுக்கிறது.

வடிவமைப்பு கலாச்சாரம்: கனடா (மேப்பிள் இலை), மெக்சிகோ (கழுகு), அமெரிக்கா (நட்சத்திரம்) ஆகிய மூன்று நாடுகளைக் குறிக்கும் வகையில் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பந்தின் எடையை மாற்றாமல், அதன் கட்டுப்பாட்டை வீரர்களுக்கு மிகவும் எளிதாக்கியுள்ளது.

குழுநிலைப் போட்டிகள் 2026 ஜூன் 11 முதல் ஜூன் 27 வரை நடைபெறுகின்றன. போட்டியிடும் அணிகள், நான்கு அணிகள் கொண்ட பன்னிரண்டு குழுக்களாக (குழுக்கள் A முதல் L வரை) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள், ஒன்றோடு ஒன்று தொடர் சுழல்முறையில் மோதுகின்றன. குழு நிலவரங்களின்படி, ஒரு வெற்றிக்கு மூன்று புள்ளிகளும், சமநிலைக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும்; தோல்விக்கு புள்ளிகள் ஏதும் இல்லை. குழுப் போட்டிகள் முடிவடைந்த பிறகு, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளும், அனைத்துக் குழுக்களிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்த சிறந்த எட்டு அணிகளும் வெளியேற்றச் சுற்றிற்கு முன்னேறும்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

வெளியேற்றச்சுற்றில் 32 அணிகள் பங்கேற்கும். இதிலிருந்து 16 அணிகள் அடுத்த சுற்றிற்குத் தேர்வாகும். அதன் பின்னர் காலிறுதி; பின்னர் அரையிறுதி; அதன் பின்னர் மூன்றாம் இடத்தைத் தேர்வு செய்யும் ஆட்டம்; பின்னர் இறுதிப்போட்டி அமெரிக்காவில், நியூஜெர்சியில் உள்ள ரூதர்ஃபோர்ட், மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 19, 2026 அமெரிக்க நேரப்படி மாலை 0300 மணிக்கு நடைபெறும்.

ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending