health tips - 2026

அப்பாச்சி தீர்வு: முகப்பரு, பித்தமயக்கம், நெஞ்சுவலி, மூளைக்குளிர்ச்சி, கண்வீக்கம், மர்மஸ்தான ரணம்…!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

முகப்பருவுக்கு…

சாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறையும். வெந்நீர் ஆவி பிடிப்பது நல்லது.

பித்த மயக்கமா?

*திப்பிலியையும் மிளகையும் சம அளவு எடுத்து தூள் செய்து தேன் சேர்த்து விளாம்பழத்துடன் சாப்பிட பித்த மயக்கம் சரியாகும்.

நெஞ்சு வலிக்கு…

முள் உள்ள வில்வமரத்தின் பட்டை இரண்டு தோலா எடை எடுத்து அரை லிட்டர் நீர் விட்டு பாதியாக கண்டக் காய்ச்சி காலை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர நெஞ்சு வலி குணமாகும்.

மூளைக்கு குளிர்ச்சி தர…

உசிலம் பூக்களுடன் அதன் இலைகளையும் உலர்த்தி பொடித்து எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சீயக்காய்க்கு பதில் பயன்படுத்தி வர எண்ணெயை எடுப்பதுடன், மூளைக்குக் குளிர்ச்சியையும் தரும்.

கண்ணில் விக்கமா?

புன்னைப் பூக்களை நீரில் ஊறவைத்து அந்த நீரால் கண்களைக் கழுவி வர வீக்கம் குறையும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

மறைவான இடங்களில் ரணமா?

ஆண்குறி, பெண் குறி, ஆசன வாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டால் குங்குமப்பூவில் தேன் விட்டு அரைத்து சாந்து போலாக்கி பூசி வர சில நாள்களில் ரணம் ஆறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.