
இரு தெலுங்கு மாநிலங்களிலும் 500 கோவில்களை கட்ட போகிறோம். கோவிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த ஒய்வி சுப்பா ரெட்டி அறிவிப்பு.
ஹிந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தெலுங்கு மாநிலங்களில் ஐநூறு கோவில்களை கட்டப் போவதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி கூறினார்.
இவற்றை கிரிஜனங்கள், தலித்துகள், பலவீன வர்கத்தினர், மீன் பிடிப்பவர்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள காலனிகளில் கட்டப் போவதாக தெரிவித்தார்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடா பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் ‘கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அவர் உரையாற்றுகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 25 லிருந்து ஜனவரி 3 வரை 10 நாட்கள் திருமலை கோவிலில் வைகுண்ட துவாரம் திறந்து வைக்கப்படும் என்றும் சாமானிய பக்தர்களுக்கு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பாகவே டிக்கெட் ரிசர்வ் செய்து கொண்டு திருமலைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.
டிடிடி நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் தீய பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஆத்திரம் அடைந்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஸ்வரூப், கன்னபாபு, செல்லுபோயின வேணு, எம்பி வங்கா கீதா மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்