china websites

பொது, சரக்குக் கப்பல் மீதான மால்வேர் தாக்குதல், உளவிலும் சீனாவின் கரங்கள்!

china websites

முஸ்டாங் பாண்டா என அழைக்கப்படும் இணைய உளவுக் குழு கடந்த ஐந்து மாதங்களாக மால்வேர் ஒன்றை உலவ விட்டு, “நார்வே, கிரீஸ் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த சரக்குக் கப்பல் நிறுவனங்களுக்குச் சொந்தமான கணினி அமைப்புகளுக்கு ரிமோட் ஆக்சஸைப் பெறுகிறது. ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET கருத்துப் படி, சரக்குக் கப்பல்கள் தாங்களாகவே  அதை வழியாக எடுத்துக் கொள்கின்றனவாம்! 

கடந்த மாதம், இங்கிலாந்து (U.K) மற்றும் அமெரிக்க (U.S.) உயர் அதிகாரிகள் சீனாவில் இருந்து வளர்ந்து வரும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரித்ததால், குறிப்பாக முக்கியமான உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதத்தில் இருந்ததால், இந்த செய்தி வெளிவந்தது.

அந்த செய்தி அறிக்கையின்படி, ஆசியா முழுவதும் உள்ள அரசுகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிராக உளவு பார்த்ததாக முஸ்டாங் பாண்டா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அண்மையில் ஐரோப்பாவிலும், முந்தைய உளவு குறித்த தகவல்களிலும் இதே போன்ற மால்வேர் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். “ரிமோட் அக்சஸ் ட்ரோஜன்” வகை மால்வேர், மின்னஞ்சல், தீங்கிழைக்கும் இணையதளம், பாதிக்கப்படக்கூடிய மென்பொருள் அல்லது பாதுகாப்பற்ற இயந்திரம் மூலம் ஊடுருவிய பிறகு, ஒரு சாதனத்திற்கான முழு அணுகலையும் அது பெறவும், கட்டளைகளை வழங்கவும் அனுமதிக்கிறது. இதன் மூலம், மிகவும் சென்சிடிவான உளவுத் தகவல்கள் தாக்குதலைத் தொடுக்க முஸ்டாங் பாண்டா நிறுவனம் போன்றவை முழுவீச்சில் இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவுடன் இணைக்கப்பட்ட இணைய உளவுக் குழு, வணிகக் கப்பல் போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது என்பதற்கான முதல் ஆதாரம் இதுவாகும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ESET இன் முதன்மை அச்சுறுத்தல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் ராபர்ட் லிபோவ்ஸ்கி கூறுகையில், “நாங்கள் கடந்த காலத்தில் இவ்வாறு பார்த்ததில்லை. இது இந்தத் துறையில் தெளிவான அவர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது. இது ஏதோ வெறும் ஒரு நிகழ்வு அல்ல. இவை வெவ்வேறு, தொடர்பில்லாத அமைப்புகளின் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள்” என்று அவர் கூறினார்.

“இணைய உளவு முயற்சியில், இத்தகைய நிறுவனங்கள் அல்லது கப்பல்களில், பிஸிகலாகப் பொருத்தப்பட்ட USB சாதனங்களின் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை” என்றார் அவர்.

வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார். “சீனாவுக்கு எதிரான எந்த ஆதாரமற்ற அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். உண்மையில், சைபர் தாக்குதல்களில் சீனா பெரியளவில் பலியாகி உள்ளது,” என்று செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறினார்.

“அனைத்து வகையான சைபர் தாக்குதல்களுக்கும் எதிராக நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை வைத்திருக்கிறோம்; அவற்றைச் சமாளிப்பதற்கு சட்டப்பூர்வமான வழிமுறைகளை நாடுகிறோம். ஹேக்கர்களால் தொடங்கப்படும் தாக்குதல்களை சீனா ஊக்குவிக்கவோ, ஆதரிக்கவோ அல்லது மன்னிக்கவோ இல்லை.” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். 

எனினும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுகே) அண்மையில் நடைபெற்ற  சைபர் செக்யூரிட்டி மாநாட்டில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சீன இணைய உளவு மற்றும் சீன ஹேக்கிங்கில் இருந்து உலகத்துக்குப் பெருகிவரும் ஆபத்தை விவரித்தனர். பர்மிங்காமில் இங்கிலாந்து அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டின்போது, ஒரு பிரிட்டிஷ் சைபர் செக்யூரிட்டி அதிகாரி செய்தியாளர்களிடம் இது பற்றிக் குறிப்பிட்ட போது, “இப்போது நாங்கள் சைபர் செக்யூரிடி துறையில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய பகுதி சீனாவாகும்” என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்..

அந்த மாநாட்டில் ஓர் உரையில், U.K. இன் சைபர் உளவுத்துறை நிறுவனமான GCHQ இன் தலைவர், “ரஷ்யா, ஈரான் ஆகியவை இப்போது உடனடி அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தினாலும், இணையம் மற்றும் சர்வதேச ஒழுங்கு தொடர்பில், சீனா “ஒரு சகாப்தத்தை வரையறுக்கும் சவாலாகவே உள்ளது. அது, பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் முன்வைக்கிறது” என்று கூறினார். 

“சீனா, மேம்பட்ட இணையத் திறன்களை உருவாக்கியுள்ளது. அதன் வசம் உள்ள ஹேக்கிங் தரவுகள், தரகர்களின் வளர்ந்து வரும் வணிகச்சூழல் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது” என்று அன்னே கீஸ்ட்-பட்லர் கூறினார். “முக்கியமாக, சீனா ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு (U.K) உண்மையான மற்றும் அதிகரித்துவரும் இணைய அபாயத்தை முன்வைக்கிறது.” என்றார் அவர்.

அதே மாநாட்டில் இன்னோர் உரையில், வெள்ளை மாளிகையின் தேசிய இணைய இயக்குனர் ஹாரி கோக்கர், “சீனாவின் இணைய உளவு பார்க்கும் தன்மை, அமெரிக்காவின் குடிமக்கள் உள்கட்டமைப்பை சீர்குலைக்கிறது. மேலும், குடிமக்களுக்கான உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் திறனை பெய்ஜிங் கொண்டுள்ளதையே அது வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.

“ஒரு நெருக்கடி அல்லது மோதல் சூழ்நிலை ஏற்படும்போது, குடிமக்கள் உள்கட்டமைப்பில் அழிவை ஏற்படுத்தவும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் சீனா அவர்களின் முன், நிலைப்படுத்தப்பட்ட சைபர் திறன்களைப் பயன்படுத்தக் கூடும்” என்று கோக்கர் கூறினார்.

“வோல்ட் டைபூன்” எனப்படும் ஒரு பெரிய உளவு முயற்சியை சீனா மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் பிடன் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. 

சைபர் உளவுகள், சைபர் தாக்குதல்கள் அல்லது அறிவுசார் சொத்து திருட்டு என, சீனா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற அரசுகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீன இணைய நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை U.K மீண்டும் மீண்டும் பரப்பி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “அந்த மாநாட்டில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், சீனாவின் சைபர் தந்திரோபாயங்கள், அறிவுசார் சொத்து அல்லது வெளிநாட்டு உளவுத்துறையை அப்படியே திருடிச் செல்ல முயற்சிப்பதில் இருந்து, முக்கியமான பயன்பாடுகள் அல்லது பிற உள்கட்டமைப்பு அமைப்புகளுக்கான ஆக்சஸஸை திருட்டுத்தனமாகப் பெற (அணுகலைப் பெறுவதற்கு) மாறிவிட்டதாக”க் கூறினார்.

அறிவுசார் சொத்து திருட்டில் இருந்து சீனா “முன்னேறிவிட்டது” என்று தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் நடாலி பித்தோர் ஒரு மாநாட்டு குழு விவாதத்தில் கூறினார்.

மேலும், “வெளிநாட்டு உளவுத்துறை அணுகல், அல்லது ஐபி திருட்டு போன்ற தகவல்களை, அவர்கள் தீவிரமாக முயற்சி செய்யவில்லை,” என்றார் அவர். “மாறாக, இந்த சீன APTகளில் இருந்து (மேம்பட்ட பரவலான அச்சுறுத்தல்கள்) நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை உள்ளே நுழையும், பின் கட்டுப்பாட்டின் அளவைப் பெறுகின்றன, நெட்வொர்க்கைக் கட்டுப்படுத்தும் திறன் அளவைப் பெறும்,  பின்னர்  அவை மிகவும் அமைதியாகச் செல்லும்.” என்று அதன் மால்வேர்களின் தன்மையை எடுத்துக் கூறினார். 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.