ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது….
“2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்!