மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. கடந்த முறை 333 இடங்களை கூட்டணியாகப் பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாகப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக.,வுக்கு தென்மாநிலங்களும் கைகொடுக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங். கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தற்போதைய கருத்துக் கணிப்பில் 19 முதல் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளத்தில் பாஜக., கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 4 இடங்கள் அதிகமாகப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களைப் பிடித்திருந்தது. தற்போது 70 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா: 17 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக., கடந்த முறை 4 தொகுதிகளில் வென்றது. இந்த முறை 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்: தமிழகத்தில் இந்த முறை 5 தொகுதிகள் வரை பாஜக., கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, பெரும்பாலான ஊடகங்கள், பாஜக., கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கின்றன.
அதன் விவரம்:
மொத்த இடங்கள்: 543 இடங்கள்
பெரும்பான்மை: 272 இடங்கள்
ரிபப்ளிக் டிவி:
பாஜக.,, கூட்டணி: 371 இடங்கள்
இண்டி கூட்டணி: 127
இந்தியா டிவி;
பாஜக.,, கூட்டணி: 371
இண்டி கூட்டணி 125
என்.டி.வி. (ரிப்பளிக் பாரத் பி-மார்க்)
பாஜக.,, கூட்டணி : 359
இண்டி கூட்டணி: 154
ரிபப்ளிக் பாரத் மேட்ரிக்ஸ்
பாஜக.,, கூட்டணி: 353 முதல் 368
இண்டி கூட்டணி: 118 முதல் 133 இடங்கள்
பிற கட்சிகள் : 43-48 இடங்கள்
டி.வி.5 தெலுங்கு
பாஜக.,, கூட்டணி: 359
இண்டி கூட்டணி 154
பிற: 31
இந்தியா நியூஸ் டி. டைனமிக்ஸ்
பாஜக.,, கூட்டணி: 371
இண்டி கூட்டணி 125
பிற: 47
ஜன் கி பாத்
பாஜக.,, கூட்டணி: 362 முதல் 392 இடங்கள்
இண்டி கூட்டணி: 141 முதல் 161 இடங்கள்
நியூஸ் எக்ஸ்
பாஜக.,, கூட்டணி: 371
இண்டி கூட்டணி: 125
பிற: 45
நியூஸ் நேசன்
பாஜக.,, கூட்டணி: 342 முதல் 378 இடங்கள்
இண்டி கூட்டணி: 153 முதல் 179 இடங்கள்
தமிழகத்தில்…:
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என ஊடகங்கள் கணித்துள்ளன.
நியூஸ் 18
தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள்
காங்கிரஸ் 6-8 இடம்
பாஜக 1-3
அதிமுக 0-2
இந்தியா டுடே
திமுக 20-22
காங்கிரஸ் 6-8
அ.தி.மு.க. 2
இண்டி கூட்டணி 33-37
ஏபிபி- சி வோட்டர் (ABP – C Voter)
தி.மு.க. கூட்டணி 37-39
அ.தி.மு.க. 1
பாஜக., 1