மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி வெற்றி

08 June27 Srilanga winபார்படாஸ் நகரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. மூன்றாவது டெஸ்ட் யில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விருதும், ஷேன் டவ்ரிச் தொடர்நாயகன் விருதும் வென்றனர்.