டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’

உலகம் சற்றுமுன்

07 June27 Canada - 2026கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார்.

பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கைத் தமிழர்களுக்கு இது மிகப் பெருமை வாய்ந்த மைல்கல் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Reply