ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். ராமலிங்கம் இன்று ஆஜரானார். ஏற்கனவே இவர் இரண்டு 2 முறை இந்த ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது..
விசாரணை ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விசாரணை ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




