எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

இந்தியா சற்றுமுன்

18mlas1 - 202618mlas - 2026எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி விமலா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி விமலா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு அளித்தனர். அதனையடுத்து, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தங்க.தமிழ்ச்செல்வனைத் தவிர்த்த மற்ற 17 எம்.எல்.ஏ-க்களும், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.