- Ads -
Home வணிகம் ரியல்மி பேட்: சிறப்பம்சங்கள்..!

ரியல்மி பேட்: சிறப்பம்சங்கள்..!

realmi pad

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி பேட் மினி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

இதே டேப்லெட் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் மினி மாடலில் 8.4 இன்ச் WCGA+ டிஸ்ப்ளே, யுனிசாக் T616 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா, டூயல் ஸ்பீக்கர்கள், 6400mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ரியல்மி பேட் மினி அம்சங்கள்:

  • 8.7 இன்ச் 1340×800 பிக்சல் WXGA+ LCD டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் யுனிசாக் T616 பிராசஸர்
  • மாலி-G57 GPU
  • 3GB LPDR4X / 4GB LPDR4X ரேம்
  • 32GB UFS 2.1 / 64GB UFS 2.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • 8MP பிரைமரி கேமரா
  • 5MP செல்ஃபி கேமரா
  • 4ஜி எல்.டி.இ. (ஆப்ஷனல்) ப்ளூடூத் 5, வைபை 802.11 ac
  • 6400mAh பேட்டரி
  • 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
  • யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

புதிய ரியல்மி பேட் மினி மாடல் கிரே மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3GB ரேம், 32GB மெமரி கொண்ட வைபை வெர்ஷன் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் எல்.டி.இ. வெர்ஷன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் வைபை வெர்ஷன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் எல்.டி.இ. வெர்ஷன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மே 2 ஆம் தேதி துவங்கியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version