Category: சினி நியூஸ்

  • முகவரியைத் தொலைத்து அவதி: ஜப்பானில் நடிகைக்கு உதவிய டாக்ஸி ஓட்டுநர்

    அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றி இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் ஜம்போ 3டி படத்தில் கோகுல் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ, ‘கும்கி’ அஷ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது அனுபவத்தை கூறுகையில்… “இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ்…

  • கேரள வனப் பகுதியில் சிறப்பு அனுமதியுடன் உறுமீன் படப்பிடிப்பு!

    ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன். இதில் ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார். அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சக்திவேல் பெருமாள்சாமி இயக்க, அச்சு இசையமைக்க, ரவீந்திரநாத் குரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை மே மாதம் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.…

  • தனுஷ் படத்துக்கு புதிய சிக்கல்!

    ]நடிகர் தனுஷ் நடித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘அனேகன்’. வரும் பிப்.13ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று சலவைத் தொழிலாளி கதாபாத்திரம். இந்தப் படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எனவே, படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் சலவைத் தொழிலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை வண்டியூரைச் சேர்ந்த வழக்கறிஞர்…

  • நடிகர் ஜெய்யின் நேரம் தவறாமை மிகவும் பிடிக்கும்: புகழ் படத் தயாரிப்பாளர்

    நடிகர் ஜெய் தற்போது வலியவன், புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புகழ் படத்தை மணிமாறன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே என்எச்4 என்ற படத்தை இயக்கியவர். பிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் படத்தை தயாரித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரிதாகி வரும் இந்தக் காலகட்டத்தில் சுஷாந்த் பிரசாத், படத்துக்கு ஜெய் தரும் ஒத்துழைப்பைப் பாராட்டி மாய்ந்துதான் போகிறார். ‘ஜெய்யின் நல்ல கதைக்கான தேடல், நேரம் தவறாமை,…

  • ஜெய் நடிக்கும் வலியவன்

    ஜெய், ஆண்டிரியா, அளகம்பெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகிறது வலியவன். இந்தப் படத்தில் ஆரோன் சௌத்ரி அறிமுகமாகிறார். பால சரவணன், அனுபம் குமார் ஆகியோர் உடன் நடித்திருக்கிறார்கள். சரவணன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில் இந்தப் படம் வருகிறது. சிவா, சில்வா ஆகியோர் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றார்கள். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் படத்துக்கான பாடல்களை எழுதியுள்ளனர்.