கேரள வனப் பகுதியில் சிறப்பு அனுமதியுடன் உறுமீன் படப்பிடிப்பு!

சினி நியூஸ்

Urumeen-movie ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன். இதில் ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார். அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சக்திவேல் பெருமாள்சாமி இயக்க, அச்சு இசையமைக்க, ரவீந்திரநாத் குரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை மே மாதம் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர், படத்தின் டிரைலர் ஜனவரி மாத இறுதியில் வெளியிடவுள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, பாண்டிச்சேரி, மியான்மர் என பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு வித்தியாசமான கதைக் களனில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய பொருளாதார பின்னணியை மையமாகக் கொண்டது. அண்மையில் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சி கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதற்குமுன் இத்தகைய இடங்களில் படப்பிடிப்பு நடத்த யாருக்கும் அனுமதி கிடைத்ததில்லையாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.