சரித்திர வேடத்தை அடுத்து மீண்டும் கல்லூரி மாணவன் வேடத்தில் விஜய்!

கிசுகிசு

vijay-kavalan சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா என இரு நாயகிகள். இவர்களுடன் சென்ற தலைமுறைக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி, நான் ஈ படத்தில் நடித்த சுதீப், தம்பி ராமையா என பலரும் திறமை காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் உள்ள சிறப்பான அம்சம், விஜய் முதன் முதலாக ஒரு சரித்திர பின்னனிக் கொண்ட கதையில் நடிப்பதுதான். அதுவும் மாறுபட்ட இரட்டைக் கதாபாத்திரம் வேறு. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்தப் படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. புலி படத்தையடுத்து ராஜா ராணி இயக்குனர் ‘அட்லி’ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடிக்கப் போகிறாராம். இதற்கு முன்னர் நண்பன் படத்தில் மாணவன் வேடத்தில் நடித்து அசத்தினார் விஜய். இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அட்லி படத்தில் மீண்டும் அப்படி ஒரு வேடம் ஏற்கவிருக்கிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.