நடிகர் ஜெய்யின் நேரம் தவறாமை மிகவும் பிடிக்கும்: புகழ் படத் தயாரிப்பாளர்

Jai-Photo நடிகர் ஜெய் தற்போது வலியவன், புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புகழ் படத்தை மணிமாறன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே என்எச்4 என்ற படத்தை இயக்கியவர். பிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் படத்தை தயாரித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரிதாகி வரும் இந்தக் காலகட்டத்தில் சுஷாந்த் பிரசாத், படத்துக்கு ஜெய் தரும் ஒத்துழைப்பைப் பாராட்டி மாய்ந்துதான் போகிறார். ‘ஜெய்யின் நல்ல கதைக்கான தேடல், நேரம் தவறாமை, எளிமை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த குணங்கள். அவர் தயாரிபாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ‘வடகறி’ படத்தை தொடர்ந்து நாங்கள் அவரோடு இணைவது இது இரண்டாவது படம். வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘வடகறி’ ஒரு நகைசுவை கலந்த த்ரில்லர் படம். ‘புகழ்’ பெயருக்கேற்றபடி வெற்றிப் படமாக அமையும். என்எச்4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அவருக்கு ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட்டு புகழ்பெற நாங்கள் எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். ரேடியன்ஸ் மீடியா வருண் மணியனோடு இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் ‘ என்று கூறியுள்ளார் சுஷாந்த். பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானவர் ஜெய். இவர், சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories