பொன்மகள் வந்தாள்… ஹெச்டி தரத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்!

Published:

ponmagal vanthal tamil rockers
ponmagal vanthal tamil rockers

அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன இன்றே தமிழ் ராக்கர்ஸ் (Tamil rockers) இணையதளத்திலும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையில் பெரிய அளவில் திட்டமிட்டு, பல்வேறு நெருக்கடிகளால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப் பட்டது. அதே நேரம், ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று எச்சரித்தனர்.

மேலும், சூரியா நடித்த படங்களை திரையிட மாட்டோம் என்றும் பிரச்னையை எழுப்பிப் பார்த்தனர். எனினும் அமேசான் பிரைமில் இந்தப் படம் திரையிடுவது உறுதி செய்யப் பட்டது

இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் பொன்மகள் வந்தாள் படம் இன்று அமேசான் பிரைமில்  ரிலீஸ் செய்யப்பட்டது. அவ்வாறு ரிலீஸ் ஆன சில நிமிடங்களில் அதே ஹெச்.டி தரத்தில்  தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியானது.

திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தமிழ்ராக்கர்ஸ்  தளத்தில் திரைப்படங்கள் வெளியாகும். அதற்கே நீதிமன்றம் சென்று,  தடைகள் வாங்கி வெளியில் வந்தபோது, தமிழ் ராக்கர்ஸ் கெத்து காட்டி, அவற்றை இணையதளத்தில் வெளியிட்டு விரும். திரையரங்குதான் என்று இருந்த நிலையில், ஓ.டி.டி. தளத்தில் வெளியான படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img