thirumalaikoil murugan ther - 2026

திருமலைக்கோவில் தேரோட்டம்; கும்பிடு சரண வழிபாடு நிகழ்த்தி பக்தர்கள் பரவசம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
thirumalaikoil murugan ther - 2026

தமிழகத்தில் எங்கும் இல்லாத வினோதமான வழிபாடு இன்று தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்பொழி திருமலை குமாரசாமி கோவில் தேரோட்டத்தின் போது நடைபெற்றது. இந்த வழிபாடு நினைத்த காரியங்கள் கைகூட கூடும் என்பதற்காக விரதம் இருந்து தேருக்கு பின்னால் தரையில் விழுந்து கும்பிடும் வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பக்தி பூர்வமாக நடைபெற்றது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு நடைபெற்றது

இக்கோயிலின் கந்த சஷ்டி திருவிழா தீபாவளி அன்று எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்றது இவ்விழாவில் தினமும் காலை ,மாலை சுவாமி புறப்பாடு ,சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றதது.

திருமலைக்கோயில் மலையடிவாரமான வண்டாடும்பொட்டலில் வைத்து நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும் தொடர்ந்து தேரோட்டமும் பெற்றது.

தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் நேர்த்தி கடனை செலுத்தினர்.

தமிழகத்தில் எங்கும் இல்லாத வினோதமான நினைத்த காரியங்கள் கைகூட கூடும் என்பதற்காக விரதம் இருந்து தேருக்கு பின்னால் தரையில் விழுந்து கும்பிடும் அற்புதமான காட்சி நடைபெற்றது.

https://www.facebook.com/reel/2187359641862548

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam