கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ

இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட
பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் இங்கே அதிகம். மதுரையில இருக்கற பையன் ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னை போனா தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி செய்ததா?என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடும் யதார்த்தத்தோடும் சொல்ல வருகிறது ‘கடலைபோட பொண்ணு வேணும்’ படம்.

முதல் படம் ’ரீங்காரம்’ ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே ’கடலை போட பொண்ணு வேணும்’ என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்து பலசாலி என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சிவகார்த்திக். இவர் சமுத்திரகனி, சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.

ரீங்காரம் படத்தின் படப்பிடிப்பைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் தான் ’கடலைபோட பொண்ணு வேணும்’ படத்தின் தயாரிப்பாளர். அந்த படப்பிடிப்பில் இயக்குனரின் திறமையைப் பார்த்து அமைந்த படம் தான் ’கடலை போட பொண்ணு வேணும்’.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோ. ஹீரோயின் மனீஷா. இவர்களைத் தவிர படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா இப்படி ஒரு காமெடி பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு இஎன்ஜே ஹரீஷ். பர்மா படத்தோட இசையமைப்பாளர் சுதர்சன் தான் இசை. படத்தொகுப்பு வில்சி. ஆர்ஜி மீடியா சார்பில் ராபின்சன் தயாரித்திருக்கிறார்.

இயக்குனரின் அடுத்த படமான பலசாலி ஷூட்டிங்கும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. பலமே இல்லாத ஒருத்தன் எப்படி பலசாலி ஆகிறான் என்பது தான் கதை. இது சூது கவ்வும் பாணியிலான பிளாக் ஹியூமர்.

எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக உருவாகி இருக்கிறது ’கடலைபோட பொண்ணு வேணும்’ படம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories