
தமிழகத்தில் பிரபலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே 2 சிறப்பு ரயில் சேவை தென்னக இரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
நவம்பர் 15 ஞாயிறு அன்று இரண்டு சிறப்பு ரயில் சேவைகள் இயங்க உள்ளது …..
திருநெல்வேலியில் இருந்து மாலை 3:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 05:00 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்
திருச்செந்தூரிலிருந்து இரவு 07:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 08:50 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
திருச்செந்தூரிலிருந்து இரவு 09:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10:45 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும்
திருநெல்வேலியில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12:45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும்
ஆறுமுகநேரி நாசரேத் ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் பாளையங்கோட்டை ஆகிய நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நிற்கும் !!
இவ்வாறு மொத்தமாக இரண்டு சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்:
மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் நேரம் நவம்பர் 16 முதல் மயிலாடுதுறை திருச்சி இடையே மாற்றப்படுகிறது .
இதுவரை மதியம் 12 35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இனி மதியம் 12:15 மணிக்கு மயிலாடுதுறை சந்திப்பில் புறப்பட உள்ளது. மஞ்சத்திடல் ரயில் நிலையம் வரை நேரம் மாற்றம் ரயிலுக்கு நடைமுறையில் வர உள்ளது .திருச்சி முதல் செங்கோட்டை வரை எந்த நேரம் மாற்றமும் கிடையாது. வழக்கம்போல் இயங்கும்.
Posts by Sakthi Paramasivan.k:
- 2027 தைப் பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு: நவ. 13-ல் தொடக்கம்
- தீபாவளி சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சேர்த்தி சேவை!
- சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!
- ஆரியன்காவு கோயிலில் முக்கிய திருப்பணி!
- குருவாயூர் ஏகாதசி: லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்!



