திடீரென்று திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இரவு 10 மணிக்கு ஒரு தொலைபேசி. அடுத்த முனையில் இருப்பவர் இரவு தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு — நான் பிரதமர் மோடி பேசுகிறேன்…!!! . பேச முடியுமா என்று கேட்கிறார்…
வெலவெலத்தது போன அதிகாரி, அடுத்த முனையில் பேசியவர் உண்மையாகவே பிரதமர்தான் என்பதை உணர்ந்து அதிர்ந்தார். பல முறை கேட்டு பழக்கமான அந்த கம்பீர குரல்தான், தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு வேண்டுகோளை வைத்தது அவருக்கு அந்த இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைக்கச் செய்திருந்தது.
“திரு கட்கரியுடன் சந்திப்பு இப்போதுதான் முடிந்தது. அவருடன் இப்போதுதான் பேசினேன். திரிபுராவையும் அஸ்ஸாமையும் இணைக்கும் சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். திரு கட்கரி தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார். தேவையான இயந்திரங்கள், பொருட்கள் விரைந்து வரும். பணியை விரைவாக முடிக்க ஆவன செய்யுங்கள் ” என்றார் பிரதமர் மோடி.
என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் தூங்காமல் இரவைக் கழித்த அந்த அதிகாரி, அடுத்த நாள் அலுவலகம் போனதுமே தேவையான அனைத்து இயந்திரங்கள், பொருட்கள், அதைச் செய்வதற்கான அரசாணைகள் என அனைத்தும் அதற்குள்ளாகவே வந்திருப்பதைக் கண்டார்.
அவரது குழு வேலை நடக்கும் இடத்துக்குப் போகும் போது இயந்திரங்கள் லாரிகள் தயாராக இருப்பதைக் கண்டார். அசாம் மாநில அரசும், திரிபுரா மாநில அரசும் முழு ஒத்துழைப்பு தர 4 நாட்களுக்குள் மொத்த பணியும் முடிந்தது.
அடுத்த நாள் கட்கரியிடம் இருந்தது நன்றி தெரிவித்து தொலைபேசி வந்தது. அந்த அதிகாரியை அடுத்த முறை தில்லி வரும்போது பிரதமர் அலுவலகத்துக்கு வரலாம் என்ற அழைப்பும் கொடுத்தார் கட்கரி.



