
PVC அடிப்படையிலான ஆதார் அட்டையில் பாதுகாப்பான QR குறியீடு உள்ளது, அதில் பல பாதுகாப்பான புகைப்படங்கள் மற்றும் மக்கள்தொகை விவரங்களுடன் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இந்த கார்டு ATM கார்டின் அளவில் இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஆதார் PVC கார்டை விரைவான தபாலில் டெலிவரி செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
UIDAI இணையதளத்தைத் திறந்து ( https://myaadhaar.uidai.gov.in/ ) உள்நுழையவும்.
‘ஆர்டர் தி பிவிசி கார்டு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அங்கு உங்கள் விவரங்களைக் காணலாம். பின்னர் அடுத்த விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு ரூ.50 செலுத்தினால் போதும்.
ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு PVC கார்டு அனுப்பப்படும்.