- Ads -
Home சினிமா சினி நியூஸ் கோடீஸ்வரியில் குடும்பத்தோடு குதுகலம்! சரத்குமார், ராதிகா, வரு!

கோடீஸ்வரியில் குடும்பத்தோடு குதுகலம்! சரத்குமார், ராதிகா, வரு!

kodiswari 1

பிரபல ரீயாலிட்டி ஷோவான கோரோர்பதி நிகழ்ச்சி பல வருடங்களாக இந்தியில் நடந்து வருகிறது இதனை பாலிவுட் புகழ் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வந்தார் .

இந்நிகழ்ச்சி இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,மராத்தி போன்ற பல மொழிகளில் நடத்தப்பட்டது.

இதில் தமிழில் நீங்கலும் வெல்லலாம் ஒரு கோடி என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பபட்டது. இதனை நடிகர்கள் சூர்யா,பிரகாஷ் ராஜ் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர்.

கடந்த சில வருடங்களாக இந்த ஷோ தமிழில் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த குறையை ராதிகா சரத்குமார் போக்கினார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கோடிஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது பாலிவுட்டின் அமிதாப்பச்சன் ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.பிரபல நடிகையான ராதிகா இதனை அவர் தொகுத்து வழங்குவதால் அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்கலந்து கொண்டனர். இது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகவே கொண்டாடபடுகிறது.

மற்றும் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பு ஆகும் பொழுது டிஆர்பி உயரும் என்று எண்ணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த எபிஸோட் மட்டும் பல முறை ரிப்பீட்டட் டெலிகாஸ்ட் செய்யப்படும் என்றும் எதிர் பார்க்க படுகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version