- Ads -
Home புகார் பெட்டி குற்றால சீஸனில் கூட்டத்தை சமாளிக்க… ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

குற்றால சீஸனில் கூட்டத்தை சமாளிக்க… ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது நிலவும் குற்றால சீசன் நேரத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் நலன் கருதி உடனடியாக ஆற்ற வேண்டிய

sengottai madurai rail

தற்போது நிலவும் குற்றால சீசன் நேரத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் நலன் கருதி உடனடியாக ஆற்ற வேண்டிய துரித கால பணிகள்

—-கடந்த சனிக்கிழமை 16/07/22 மதியம் 2.15க்கு நான் செங்கோட்டை ரயில் நிலையம் சென்று குற்றால சுற்றுலா பயணிகள் கூட்டம் எவ்வாறு செங்கோட்டை ரயில் நிலையத்தை தமது ரயில் பயணங்களுக்கு பயன்படுத்துகின்றனர் என அறிய செங்கோட்டை ரயில் நிலையத்தில் பொதிகை ரயில் செல்லும் வரை நின்று இருந்தேன்.

—-எனது குறிப்புகள் —-

16/07/22 அன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் மாலை 2மணி முதல் 6 .20 மணி வரை நல்ல மழையினூடே கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் , செங்கோட்டை – மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ்,செங்கோட்டை – திருநெல்வேலி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை -சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ,
செங்கோட்டை சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் இந்த ரயில்களில் ஏறி பயணிக்க குற்றால சீசனுக்கு வந்து ஊர் திரும்ப டிக்கட் எடுக்க வந்தவர்களின் கூட்டம் மிக மிக அதிகம்.

அன்று
1)16/07/22 அன்று செங்கோட்டை ரயில் நிலைய டிக்கட் கவுண்டர்களில் நல்ல கூட்டம்.எனவே மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் குற்றால சீசனை கருதி செங்கோட்டை ரயில் நிலையத்தில் சனி ஞாயிறுகளில் சிறப்பு டிக்கட் கவுண்டர்கள் திறக்க வேண்டும்.

2) 16/07/22அன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்களின் வருகை புறப்பாடுகளை அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் வேலை செய்யவே இல்லை.
அன்று பிற்பகல் 4 மணிக்கு முன் முதல் பிளாட்பாரத்தில் 3.05 கொல்லம் சென்னை ரயிலும்2 வது பிளாட்பாரத்தில் 3.45 மதுரை ரயிலும் 3 வது பிளாட்பாரத்தில் 2.55 திருநெல்வேலி ரயிலும் நின்றிருந்தன.அறிவிப்பு ஒலிபெருக்கி வேலை
செய்யாததால் திருநெல்வேலி ரயிலில் ஏற வேண்டிய பயணிகள் மதுரை பயணிகள் ரயிலிலும் மதுரை ரயிலில் ஏற வேண்டிய பயணிகள் திருநெல்வேலி ரயிலிலும் ரயில் மாறி ஏறி அமர்ந்து கொண்டனர் . நான் அங்கு சென்று பயணிகளிடம் விவரம் கூறிய பிறகு பதற்றத்துடன் தத்தம் ரயில்களில் வந்து ஏறி
அமர்ந்து கொண்டனர்.

3)செங்கோட்டை ரயில் நிலைய 1,2 பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ள கிரானைட் தளம் 16/07/22 அன்று நல்ல மழை பெய்ததால் வழு வழு என இருந்தது. ரயில்களில் ஏறுவதற்காக வேக வேகமாக வந்த பல பயணிகள் இந்த தளங்களில் வழுக்கி விழுந்தனர்.

எனவே மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் உடனடியாக கீழ்க்கண்ட பணிகளை பயணிகளின் நலன் கருதி செய்ய வேண்டுமென செங்கோட்டை வட்டார மக்களும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரும் பணிவன்புடன் கேட்டு கொள்கின்றனர்

(1) செங்கோட்டை ரயில் நிலையத்திலுள்ள ரயில்கள் வருகை/ புறப்பாடு தொடர்பான பொது அறிவிப்பு ஒலி பெருக்கிகள் அனைத்து பிளாட்பாரங்களிலும் எப்போதும் தங்கு தடையின்றி இயங்குவதற்கான நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

2) செங்கோட்டையில் சனி ஞாயிறுகளில் ரயில் டிக்கட் எடுக்க கூட்டம் அதிகமாக வருவதால் குற்றால சீசன் முடியும் அக்டோபர் மாதம் வரை கூடுதல் டிக்கட் கவுண்டர்கள் மாலை 2 முதல் 6.15 வரை திறக்கப்பட வேண்டும்.RPF அதிகாரிகள் காவலர்கள் கூட்டங்களை கவுண்டர்களில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
மெஷின் மூலம் டிக்கட் வழங்கும் தனியார் ஏஜண்டுகளும் நியமனம் செய்யப்பட வேண்டும்.

3) செங்கோட்டை ரயில் நிலைய பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ள வழுக்கும் தன்மையுடைய கிரானைட் தளங்களுக்கு பதிலாக சொர சொரப்பான தளங்கள் அமைக்கப்பட வேண்டும்..

  • ராமன் (செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க பிஆர்ஓ.,)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version