- Ads -
Home புகார் பெட்டி திருமாவளவன் ரூ.2000 கோடிக்கு சொத்து சேர்த்திருக்காரா?: மத்திய அரசு விசாரிக்கக் கோரிக்கை!

திருமாவளவன் ரூ.2000 கோடிக்கு சொத்து சேர்த்திருக்காரா?: மத்திய அரசு விசாரிக்கக் கோரிக்கை!

ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தலைவர் நாகராஜன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மை தானா? என்று நாகராஜன் அவர்களை உடனே விசாரிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை

thirumavalavan
  • திருமாவளவன் 2000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருக்காரா??
  • மத்திய அரசு விசாரிக்க வேண்டுமென இந்துமக்கள்கட்சி கோரிக்கை!

சமீப காலமாக தொல்.திருமாவளவன் அவர்கள் இந்து மதத்திற்க்கு எதிராக சனாதனத்தை வேறருப்போம் என்பதும், தனித்தமிழ் நாடு என்று பிரிவினைவாதம் பேசுவதும், தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும்,
கிறிஸ்தவ மதமாற்றத்திற்க்கும் ஆதரவளிப்பதும்,சிறைகளில் இருக்கும் குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கோருவதும்,மத்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக போராடுவதும், திருவாவளவன் அடிக்கடி இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வதும், இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு எங்கேயாவது எந்த நாட்டிலையாவது ஏதேனும் பிரச்சனை என்றால் முதல் ஆளாக திருமாவளவன் குரல் கொடுப்பதும் போன்ற திருமாவளவனின் நடவடிக்கைகளும் அவரது செயல்பாடுகளும்,அவரது பேச்சுகளும்,கருத்துகளையும் பார்க்கும் பொழுது திருமாவளவன் எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்? திருமாவளவனை யாரெனும் பின்னால் இருந்து இயக்குகிறார்களா? திருமாவளவனுக்கு இதனால் என்ன பயன் என்று மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலையில் திருமாவளவன் 2000 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார் என்று ஒரு அதிர்ச்சியான செய்தியை ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் நாகராஜன் கூறியுள்ளார்.

அதாவது கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அமைப்புகளிடமிருந்து விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார். 2000 கோடி ரூபாய்க்கு மேல் திருமாவளவன் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்று ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.இந்த வீடியோ சமூக வலையதளங்களில் தற்பொழுது பரவி வருகிறது.

திருமாவளவன் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும் 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிற்கு அசையா சொத்துக்களும் உள்ளன என மொத்தம் 76 லட்சத்து 99 ஆயிரத்து 92 ரூபாய் இருப்பதாக கூறியிருந்தார்.

2014 தேர்தலின்போது மதிப்பு 76 லட்சத்து 50 ஆயிரத்து 241 ரூபாய் இருந்த சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 48 ஆயிரத்து 851 ரூபாய் மட்டுமே அதிகரித்திருக்கிறது.
அப்படி இருக்கும்போது 2000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருக்கிறார் என்று திருமாவளவன் மீது ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தலைவர் நாகராஜன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மை தானா? என்று நாகராஜன் அவர்களை உடனே விசாரிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.

  • M.சோலைகண்ணன்
    (இந்துமக்கள்கட்சிமதுரை மாவட்டத் தலைவர்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version