- Ads -
Home உரத்த சிந்தனை மோ(ச)டி எனும் படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ள எடுபிடிகளின் மோசடி!

மோ(ச)டி எனும் படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ள எடுபிடிகளின் மோசடி!

mosadi film wrap

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத பிரதமரை மறைமுகமாக அவதூறாக சித்தரிக்கும் தமிழ் பட வரிசைகளில் இதோ மற்றொன்று மோ(ச)டி…

பட தலைப்பு, கிராபிக்ஸ்இமேஜ் , அதிலுள்ள வாசகங்கள் என படத்தின் போஸ்டரை பார்த்தாலே அப்பட்டமாக தெரிகிறது. உள் கருத்து , ஒரு பிட் வசனம், நமக்கு சாதகம் என சப்பை கட்டு கட்டிகடந்து செல்ல வேண்டாம்.

தியேட்டருக்கே போகாத பாமர ஏழை மனதில் கூட இந்த போஸ்டர் தாக்கத்தை ஏற்படுத்தும்! போனால் போகட்டும் என பல விஷயங்களை கடந்து சென்றதன் விளைவு தான்! தமிழக மக்கள் மனங்களில் இன்று மாபெரும் விஷம் விதைக்கப்பட்டு அது மரமாக வளர்ந்துள்ளது!

அரசுக்கு எதிராக , அரசு திட்டங்களுக்கு எதிராக , இந்து மதத்திற்கு எதிராக , தேசத்திற்கு எதிராக , புரட்சி , போராட்டம் என ஹீரோயிசம் வசனங்களை மதத்திற்கு , அரசுக்கு எதிரான தூண்டுதல் என காணாமல் கருத்து சுதந்திரம் என்ற ஒற்றை வாசகத்தில் கடந்து செல்கின்றோம் நாம்!

ஆனால் நபிகளை அவதூறாக சித்தரித்ததாக கூறப்படும்” இன்னசன்ஸ் ஆப் முஸ்லீம் ”

இயேசுவை அவதூறாக சித்தரித்ததாக கூறப்படும் ” தி டாவின்சிகோட் ”

முல்லை பெரியாறு அணையை மையபடுத்தி எடுக்கப்பட்ட ” டேம் ”

ஆப்கானிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “விஸ்வரூபம் ”

இவைகளை எல்லாம் அவர்கள் எதிர்த்ததன் நோக்கம் சினிமாவின் தாக்கத்தை அவர்கள் உணர்ந்ததால்! ஆனால் நம்மிடம் அந்த விழிப்புணர்வு இல்லை!  சுதந்திரம் அளவோடு இருக்க வேண்டும் அளவற்ற சுதந்திரம் இந்திய இறையாண்மைக்கே ஆபத்தை ஏற்படுத்தும்!

வீட்டிலே குழந்தைகளை நல்ல பேசுகிறது என பேச விட்டால் மெல்ல மெல்ல மற்றவர்களை இமிடேட் செய்யும் அடுத்து சிலரை கேலி பேசும் அடுத்து சிலரை மரியாதை குறைவாக பேச துவங்கும் அடுத்து அம்மா அப்பாவையே மரியாதையின்றி பேச துவங்கும். அப்போதும் சிரித்து கொண்டிருதால் வெளியில் பேசும் கடைசியில் தறிகெட்டு போகும். அதன் எதிர்காலம் சீரழிந்து போகும்.

அதட்ட வேண்டிய இடத்தில் … மிரட்ட வேண்டிய இடத்தில்… அடிக்க வேண்டிய இடத்தில்… நாம் அதை செய்ய தவறினால் நாளை சமூகத்தில் ஒரு மோசமான நபரை உருவாக்கிய பழி நம்மையே சாரும்!

திரைப்பட தணிக்கை குழு என்ன செய்கிறது ? என்ற ஒற்றை கேள்வியில் இந்த பாரத்தை சுமை தாங்கியில் வைத்து செல்ல இயலாது!

அதிலும் பல அரசியல் இருக்கிறது. ஆம் பிரிவினை வாத பிண்ணனிகள் இலுமினாட்டிகளின் சக்தி அந்நிய உள்நாட்டு பண பலம் , தணிக்கை இடம், முறை, என பல இரும்பு சங்கிலிகள்!  தணிக்கை குழுவில் ஒருவர் எதிர்த்தால் அடுத்த முறை அவர்களை அழைப்பதில்லையாம்! குழுவில் வேறு மூன்று பேரை வைத்து தணிக்கை சான்று பெறுகிறார்களாமே?

தணிக்கை அதிகாரிகள் உடந்தையா ? இவர்களின் பிண்ணனி என்ன ?! இது முழுமையாக சீர்திருத்தம் செய்யப்படவில்லை எனில் தேசியவாதிகளின் ஒரு வருட உழைப்பு ஒரு நொடியில் வீணாகியே போகும்!

காரணம் தமிழகத்தில் சினிமா மக்கள் மனதில் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை! இனியொரு விதி செய்வோம் !

– கா.குற்றாலநாதன் (வழக்கறிஞர், நெல்லை)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version