![லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வரகு அரிசி தயிர் சாதம்! 1 varaku curd rice](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/varaku-curd-rice.jpg)
வரகு அரிசி தயிர் சாதம்
தேவையான பொருட்கள்
வரகு அரிசி-1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
பால்-1/2 கோப்பை தயிர்-1/4 கோப்பை
மாதுளம் பழம் முத்துக்கள் -2 மேஜைக்கரண்டி
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை-1 கோது
கொத்தமல்லி இல்லை- சிறிது
தாளிக்க:
எண்ணெய் -2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வரகு அரிசியை நன்கு கழுவி, நீர் சேர்த்து மென்மையாக வேகவைக்கவும்.
பின்னர் சிறிது ஆற வைக்கவும் பிறகு, பால் தயிர் உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு தாளிதம் செய்து இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிசைந்த வரகு தயிர் கலவையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மாதுளம் முத்துக்கள் கொத்தமல்லி இல்லை சேர்த்து பரிமாறவும்.