- Ads -
Home உரத்த சிந்தனை பஞ்சமி நிலம் – கோயில் நிலம்!

பஞ்சமி நிலம் – கோயில் நிலம்!

murasoli owner where

முரசொலி மூலப்பத்திரம் விசயத்தை நம்மில் பலர் திமுகவை எதிர்ப்பதற்காகவும், நக்கல் பண்ணுவதற்காகவும், எழுதி வருகிறார்கள். இதன் சீரியஸ்நெஸ் நிறைய பேருக்குப் புரியவில்லை. இந்த ஒரு விசயத்தில் சரியான, நேர்மையான தீர்ப்பு வந்து விட்டால் போதும், நம் மாநிலத்திற்கு மிகப் பெரிய விடிவுகாலம் காத்திருக்கிறது.

திமுகவிடம் இருந்து, முறைப்படி அதை மீட்டு, மீண்டும் அரசு தன்னகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த்து விட்டால், மொத்த திராவிடத் திருட்டுத் தனமும் வெளியே வந்துவிடும். எப்படி?

தடா. பெரியசாமி ஜி கூறும் ஆவனப்படி, இப்பொழுதைய பஞ்சமர் நிலம் 1.16 லட்சம் ஏக்கர் தான் இருப்பதாக அரசு தரப்பில் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், பழைய ஆவனப்படி, 12 லட்சம் ஏக்கர்கள் பஞ்சமி நிலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்ப மீதி எங்கே?

திமுக 40% அதிமுக 40% குரங்கு பிய்த்துக் கொடுத்த அப்பமாக அரசு உயர் அதிகாரிகள் 20% ஆக்கிரமித்திருப்பார்கள் என்பது கணிப்பு. அதாவது, 10.8 லட்சம் ஏக்கர் நிலம் திருடப் பட்டிருக்கிறது. இதன் மதிப்பு, மிகக் குறைந்த சராசரியாக ஒரு ஏக்கரை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைத் திருடியிருக்கிறார்கள். (ரூபாய் 5,40,00,00,00,000)

இவ்வளவு திருடியிருக்கிறார்களா என்று வாயைப் பிளக்காதீர்கள். இதை விடப் பற்பல மடங்கு கோவில் நிலங்களையும் திருடியிருக்கிறார்கள். ஆகையால், இந்த ஒற்றை பஞ்சமி நிலத்தை சட்டத்தின் மூலமாக முறைப்படி நீதிமன்றம் மீட்டுக் கொடுக்குமானால், மொத்த பீடையும் தமிழகத்தை விட்டு விலகி விடும்.

அடியிலிருக்கும் ஒற்றைக் கல்லை உறுவி விட்டால் மொத்தக் கட்டடத்தையும் சரிச்சுடலாம். அதை இப்ப ஒற்றை ஆளாகச் செய்ய முனைந்திருக்கிறார் – தடா பெரியசாமி!

ஆனால், இது அத்தனை சாதாரண விசயமல்ல. எந்த நேரமும், எந்த நிமிடமும் தடா பெரியசாமி ஜி அவர்கள் உயிருக்கு ஆபத்து வரலாம். பொன். மாணிக்கவேல் சார் மாதிரியான கிரிமினல்களின் சூட்சுமம் தெரிந்தவர் அல்ல தடா பெரியசாமி. இறைவனின் பூரண அருள் ஒன்றே அவரைக் காக்க முடியும். நாம் எல்லோரும் அவர் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் மனமுவந்து பிரார்த்தனை செய்வோம்.

#பஞ்சமி_நிலம் #கோவில்_நிலம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version