- Ads -
Home சமையல் புதிது சட்டுன்னு செய்யலாம் பொட்டுக்கடலை பர்ஃபி!

சட்டுன்னு செய்யலாம் பொட்டுக்கடலை பர்ஃபி!

pottukalalai parfi

பொட்டுக்கடலை பர்பி
தேவையானவை:

பொட்டு கடலை -200 gm
நெய் -150கிராம்
தூள் சர்க்கரை -150 gm

அலங்கரிக்க

பாதாம் -6 pieces
கருப்பு ஏலக்காய் -1 தேக்கரண்டி
குங்குமப்பூ – 1 தேக்கரண்டி

செய்யும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பொட்டுக்கடலை போட்டு, இளம் தீயில் வறுக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்

கடலை நன்கு ஆறிய பின் மிக்சியில் தூளாகும் வரை அரைக்கவும். பொடியாக்கி வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு வைக்கவும்

பொட்டு கடலை போட்டு கிளறிய பர்பி மாவை ஒரு நெய் தடவிய தட்டில் பரப்பி, அதில் ஏலக்காய்த் தூள், நறுக்கிய பாதாம் மற்றும் குங்குமப்பூவை சேர்க்கவும்.

சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து , தட்டில் உள்ள மாவை சிறு சிறு சதுர வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும். விரும்பினால் இதனை உருண்டையாகவும் உருட்டிக் கொள்ளலாம்

இதனை மாலை வேளை சிற்றுண்டியாக சுவைத்து மகிழலாம். புரதச்சத்து அதிகம் நிறைந்த இந்த இனிப்பை அனைவரும் தயாரித்து உட்கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version