- Ads -
Home நலவாழ்வு மருத்துவம்: பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

மருத்துவம்: பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன? இன்று, பரவலாக காணப்படும் ‘ஸ்வைன் ப்ளு’விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே ‘பன்றிக்காய்ச்சல்’ என்கின்றனர். 2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்? பொதுவாக, இவை குளிர்காலங்களில் அதுவும், வசந்த காலம் என்று அழைக்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக தோன்றும். வசந்த காலங்களில் உடலில், கபம் இயற்கையாகவே அதிகரிக்கிறது. இதனால் சளி, இருமல், தலைக்கனம், தும்மல் மூச்சுத்திணறல், ஜுரம் போன்றவை மக்களிடையே பரவலாக காணப்படும். 3 கப ஜுரம் எப்படி பரவுகிறது? பாதிக்கப்பட்ட, நோயாளி தும்மினாலோ, இருமினாலோ கிருமிகள், காற்றின் மூலம் பரவி, மற்றவர்க்கு தொற்றிக் கொள்ளும். வசந்த காலங்களில், மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், மக்களை அதிகம் தாக்கும். 4 கப ஜுரம் யாரை அதிகம் பாதிக்கும்? சுகாதாரம் அற்ற, நெருக்கமான இடங்களில் வசிப்போர், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ஆஸ்துமா நோயாளிகள் போன்றோரை, எளிதில் பாதிக்கும். 5 கப ஜுரத்தின் அறிகுறிகள்? மூக்கு ஒழுகும்; மூக்கடைப்பு, தும்மல் வரும்; சளி, இருமல், காய்ச்சல், தலைக்கனம், உடல்வலி, மூட்டு வலி, கைகால் வலி கடுமையாகும்; உடல் சோர்வு இருக்கும்; பசியின்மை, சளியுடன் கூடிய ஜுரம் என, படிப்படியாக அறிகுறிகள் அதிகரித்து கொண்டே போகும். 6 கப ஜுரம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? வசந்த காலத்தில், கபத்தை எதிர்க்கும் தன்மை உடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம், கபம் தாக்காதவாறு, நம் பழக்க வழக்கங்களை அமைத்து கொள்வது முக்கியம். 7 கப ஜுரம் இருந்தால், உணவு முறையில் மாற்றம் தேவையா? குளிர்ந்த உணவு, குளிர் பானங்கள், பழரசங்கள், இனிப்பு மற்றும் புளிப்பு மிகுந்த உணவு பொருட்கள், கபத்தை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமல்லாமல், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ளலாம். பகல் நேரத்தில் உறங்க கூடாது. பகல் உறக்கம், நெஞ்சில் கபத்தை அதிகரிக்க செய்யும். 8 கப ஜுரம் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? கப ஜுரம் தாக்கிய நோயாளியுடன் சேர்ந்து உறங்குவது, ஒரே தட்டில் உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதன் மூலம், கப ஜுரம் பரவுவதை தவிர்க்கலாம். மேலும், தும்மல், இருமலின் போது, கைக்குட்டையால் மூக்கை மறைத்து கொள்வதன் மூலம், கிருமிகள் காற்றில் பரவாதவாறு தடுக்கலாம். 9 கப ஜுரம் முற்றிலும் குணமாக, ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளனவா? இதுபோன்ற ஜுரங்களுக்கு, ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் சிறந்த சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. கபத்தையும், ஜுரத்தையும் குறைக்கும் சூரணங்கள், கஷாயங்கள், பஸ்பங்கள், அரிஷ்டங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், பல சக்தி வாய்ந்த ரஸ மருந்துகள், எந்தவிதமான தீவிரமான ஜுரத்தையும் குறைக்கும் குணமுடையவை. 10 கப ஜுரத்திற்கு, ஆயுர்வேதத்தில் தடுப்பு மருந்துகள் உள்ளனவா? உடலில், கபம் அதிகரிக்காமல் இருக்க, நல்ல மருந்துகள் மற்றும் சூரணங்கள் உள்ளன. ‘சுதர்சனம்’ மாத்திரை மற்றும் ‘தாலிசாதி’ சூரணம் போன்ற மருந்துகள் கப ஜுரம் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றவை. வசந்த காலங்களில், சளி தாக்கியதும் உடனே, ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. – பி.எல்.டி.கிரிஜா ஆயுர்வேத மருத்துவர் சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனை 044 – 24414244

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version