- Ads -
Home நலவாழ்வு அகத்திக்கீரைல இவ்வளோ இருக்கா..?

அகத்திக்கீரைல இவ்வளோ இருக்கா..?

akathi kirai

அகத்திக் கீரையின் மகத்துவம்

உட்சூட்டைத் தணிப்பதில் தனிச் சிறப்பு இக்கீரைக்கு உண்டு.

பால் கொடுக்கும் தாய்மார்கள் இக்கீரையை சாப்பிட பால் நன்கு கரக்கும். மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும். இக்கீரையை உலர்த்தி சூரணித்து காலை, மாலை இரண்டு கிராம்

பொடியை சாப்பிட்டு இளஞ்சூடான நீர் பருகி வர மூன்று நாள்களில்
மார்பு வலி குணமாகும்.

அகத்திக் கீரைத் தைவத்தில் ஸ்நானம் செய்து வர பித்தம் தணிந்து மயக்கம், எரிச்சல் புகைச்சல் குணமாகும்.

அகத்திக் கீரையை தேங்காய், மிளகு சேர்த்து சமைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

இக்கீரையை அரைத்து சூடுபண்ணி பற்றுப்போட அடிபட்ட வீக்கங் களுக்கு குணம் தெரியும்.

இதன் சாற்றை நெற்றியில் தடவி ஆவி பிடிக்க தலைவலி நீங்கும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் சாப்பிடுவதே நல்லது. அடிக்கடி சாப்பிட்டால் வாய்வு உண்டாகும். வாயுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக இக்கீரையை உண்ணக் கூடாது. இரவிலும் வேறு மருந்து உண்ணும் போதும் இக்கீரையை உண்ணக் கூடாது. பால் அருந்து வதால் உண்டாகும் நன்மை இக்கீரையை உண்பதால் உண்டாகும். ஜீரண சக்தியை பெருக்கும். பித்தத்தை தணிக்கும்.

தொண்டை ரணம். தொண்டை வலி இவற்றுக்கு இக்கீரையை பச்சையாக மென்று சாற்றினை உள்ளே விழுங்க குணமாகும்.

பெரியம்மை நோயின் வேகத்தைத் தணிப்பதற்கு இக்கீரைப் பட்டையை விதிப்படி குடிநீர் செய்து கொடுக்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version