- Ads -
Home நலவாழ்வு அப்பாச்சி தீர்வு: நட்டுவாக்களி கடி, தொண்டை நோய், இருதயபலம், மாலைக்கண், வெயிட்போட, அஜீரணம், ஈறுபுண், வாய்ப்புண்..!

அப்பாச்சி தீர்வு: நட்டுவாக்களி கடி, தொண்டை நோய், இருதயபலம், மாலைக்கண், வெயிட்போட, அஜீரணம், ஈறுபுண், வாய்ப்புண்..!

health tips

நட்டுவாக்களி கடிக்கு

தும்பை இலையை அரைத்து கொட்டைப் பாக்களவு உள்ளுக்கு சாப்பிட்டு அதனையே கடி வாயிலும் தேய்க்க உடனே வலி நீங்கும்.

தொண்டை சம்பந்தமான நோய்க்கு…

விளாம்பழத்துடன் சிறிது மிளகும், திப்பிலியும். தூள் செய்து கலந்து தேன் சேர்த்து சாப்பிட தொண்டை சம்பந்தமான எல்லா நோய்களும் ருணமாகும்.

துவரையிலே மருத்துவம்

துவரை இவை ஒரு பிடி. இதன் முளைத்த விதை கால்பிடி சேர்த் தரைத்து மார்பில் பற்றுப்போட இரண்டு மூன்று நாள்களில் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.

உள் உறுப்புகளின் காரணமாக வரும் வாய் வேக்காடு வாய்ப்புண். ஈறு புண்கள் தினமும் பத்து துவரைக் கொழுந்து இலைகளை மென்று தின்று வர ஐந்து நாள்களில் குணம் தெரியும்.

துவரம் பருப்புடன் மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, மிளகாய்
சேர்த்து ரசம் வைத்து பருகி வர வாயுக் கோளாறும் அஜீரணமும் நீங்கும்.

துவரம் பருப்பு. புழுங்கலரிசி, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு. தேங்காய், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து அடை செய்து சாப்பிட உடல் சதை போடும்.

துவரம் பருப்பு, சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம் இவற்றை வறுத்து பொடி செய்து சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட இரைப்பை வலிமை பெறும். வயிற்றுப் போக்கும், பசியின்மையும் நீங்கும்.

இருதயம் பலப்பட…

கடுக்காயை நன்கு உவர்த்தி உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி தூளாக்கி பசும்பாலில் ஒரு சிட்டிகையளவு கலந்து இரவில் சாப்பிட்டு வர இருதயம் பலப்படும்.

மாலைக்கண் சரியாக…

கருந்துளசி இலைச் சாற்றை தினமும் இரவு கண்களில் விட்டு வர மாலைக் கண் குணமாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version