- Ads -
Home நலவாழ்வு அப்பாச்சி தீர்வு: மலேரியா, ஆஸ்துமா..!

அப்பாச்சி தீர்வு: மலேரியா, ஆஸ்துமா..!

health tips

மலேரியா ஜூரத்திற்கு…

இஞ்சியை நசுக்கி சாறெடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி வைத்தால் மேலே தெளிந்த நீர் நிற்கும். அந்த நீரை மட்டும் பக்குவமாக வடித்து அதனுடன் சிறிது துளசி சாறும் தேனும் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர மலேரியா குணமாகும்.

ஆஸ்துமாவுக்கு…

உருளைக்கிழங்கு, வாழைக்காய், காராமணி, வாழைப்பழம், புளிப்புத் தயிர், புளிப்பு மோர், ஐஸ்கிரீம், குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் எண்ணெயில் வெந்த பஜ்ஜி. போண்டா, வடை போன்றவற்றை விலக்க வேண்டும். இரவில் கண் விழிக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையும் கொள்ளு, துவரம்பருப்பு, பாசிப் பருப்பு, பூண்டு, பெருங்காயம் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கிடைக்கும் சமயத்தில் எல்லாம் துளசியை மென்று விழுங்குவது நல்லது.

வெள்ளெருக்கம் பூ சாறு, வெள்ளெருக்கம் இலைச்சாறு, லவங்கம், மிளகு சேர்த்தரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் வாயிலடக்கி சாப்பிட குணமாகும்.

வாரம் இருமுறை தலைக்கும் உடம்புக்கும் அரக்குத் தைவம் தேய்த்துக் குளிக்கலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, துளசி, ஆடாதொடை, விஷ்ணு கரந்தை. சித்திரத்தை, திப்பிலி, நஞ்சறுப்பான், தும்பை ஆகியவை கபத்தை நீக்கும் மூலிகைகளில் சில. இவற்றில் கிடைப்பவற்றைச் சேகரித்து இடித்து சவித்து வைத்துக் கொண்டு ஒரு பங்கு தூளுக்கு எட்டு பங்கு நீர் சேர்த்து நான்கில் ஒரு பாகமாக கண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் குடித்து வர கபம் கரைந்து வெளியேறும். மூச்சுத் திணறலும் நிற்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version