- Ads -
Home நலவாழ்வு ‘டூ வீலர்’ பெண்களா..! இடுப்பு பத்திரம்..!

‘டூ வீலர்’ பெண்களா..! இடுப்பு பத்திரம்..!

பெண்கள் சைக்கிள் ஓட்டுவதையே அதிசயமாக பார்த்த காலம் ஒன்றிருந்தது. இன்றைய நவீன பெண்கள் டூ வீலரில் பறக்கிறார்கள். ஸ்பீட் பிரேக்கரில் கூட வேகத்தை குறைக்க மறுக்கிறார்கள்.

 

இப்படி வண்டியை பள்ளம் மேட்டில் விட்டு ஓட்டும் போது ‘ஷாக்-அப்சபர்’ சேதமடைகிறதோ இல்லையோ..! மனித முதுகெலும்பின் ‘ஷாக்-அப்சபர்’ போய்விடும். இந்த ஷாக்-அப்சபருக்கு ‘காக்சிக்ஸ்’ என்று பெயர்.

 

 

https%3A 1.bp.blogspot.com 5BH4aE236ho VPipXDhIqMI AAAAAAAADOQ xZIfOYAkIQE s1600 22541108 326b 4767 9fb3 8202c90d6fb1HiRes

 

மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்பதற்கு இதுதான் அழுத்தமான அடையாளம். ‘காக்சிக்ஸ்’ முதுகெலும்பு தொடரின் வால்பகுதி. நான்கு எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பார்ப்பதற்கு ஒரே எலும்பு போல் தோற்றம் தரும். இந்த எலும்புகளுக்கு எந்தவித அசைவும் கிடையாது.

 

ஆண்களுக்கு மிகச் சிறியதாக இருக்கும் ‘காக்சிக்ஸ்’ பெண்களுக்கு ஒரு ‘ஹாக்கி ஸ்டிக்’ வளைவு போல் உள்பக்கமாக வளைந்து முடியும். பெண்கள் தாய்மை அடைவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. குழந்தையை சுமக்கும் கர்ப்பபையை இது கொஞ்சம் தாங்கி பிடிக்கும். மற்றபடி இதனால் எந்த பயனும் இல்லை. சில தொந்தரவுகள் மட்டும் உண்டு.

 

உட்காரும்போது முதுகெலும்பும் ‘காக்சிக்ஸும் இணையும் இடம் இயல்பாகவே நெகிழ்ந்து கொடுக்கும். சிலருக்கு ‘காக்சிக்ஸ்’ நீளமாக இருந்தால் நெகிழ்ந்து கொடுக்காமல் அழுத்தப்படும். அதனால், அந்தப் பகுதியில் வலி எடுக்கும். லேசான வலி என்றால் கவலைப் படவேண்டியதில்லை. ஆனால், தொடர்ந்து வலித்தலோ, உட்கார்ந்திருக்கும் போது அதிகம் வலித்தலோ கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும்.

 

இந்த வில்லங்கமான ‘காக்சிக்ஸ்’ ஆண்களை விட பெண்களுக்கு நீளமாக இருப்பதால், பெண்களை அதிகம் தாக்குகிறது. அதிலும் இருச் சக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு கூடுதல் தாக்குதல்..! ‘ஷாக்-அப்சர்பர்’ நல்ல நிலையில் இருப்பதும், ஸீட்டில் அதிக ‘குஷன்’ இருப்பதும், ‘காக்சிக்ஸ்’ மீதான பாதிப்பை சற்று குறைக்கலாம்.

 

பெண்கள் இப்படி அமரக் கூடாது

 

டூ வீலரில் பெண்கள் புடவை அணிந்து பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் போது கால்களை ஒரே பக்கமாக தொங்கப் போட்டு பயணித்தால், அது முதுகெலும்பை கஷ்டப்படுத்தும். இந்த மாதிரி பயணத்தை 10 கி.மீ.-க்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அதுவும் இப்போது வருகிறதே பின் ஸீட்டில் ஸ்டூல் இருப்பதுபோல் உயரமான பைக்(150-250 சி.சி.) அது முற்றிலுமாக பெண்களுக்கு ஒத்து வராத வாகனம். அதில் பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

 

இப்படியும் அமரலாம்..!

பெண்கள் இப்படி ஒரே பக்கமாக கால் போட்டு அமர்ந்து சென்றாலும் பல பெண்கள் தங்கள் உடலைத் திருப்பி கணவனின் தோள் வழியாக சாலையைப் பார்க்க முயற்சிக்கிறார்கள். இது தவறான முறையாகும். பின்னால் அமரும்போது சாலையைப் பார்க்க முயலாமல், வண்டியையோ, கணவரையோ இறுக்கமாக பிடித்துக் கொண்டு நேராக உட்காரவேண்டும். இன்று சுடிதார், ஜீன்ஸ் பெண்கள் அதிகமாகிவிட்டதால் இருப் புறமும் கால் போட்டு  அமருவது சாலச் சிறந்தது.

 

இதுதான் சரியான ரைடிங் பொசிஷன்

பெண்கள் டூ வீலரை ஓட்டும் போது நேராக முதுகெலும்பு ஒரு நேர்க்கோட்டில் இருப்பதுபோல் அமர்ந்து ஓட்ட வேண்டும். பள்ளம் மேட்டில் விடாமல் மெதுவாக செல்லவேண்டும். எல்லா விஷயத்திலும் ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இந்த விஷயத்தில் விட்டு கொடுத்தால் அவர்கள் முதுகுக்குத் தான் நல்லது. மெதுவாக சென்றால் ‘காக்சிக்ஸ்’ வலியில் இருந்து தப்பிக்கலாம்!

 

இடுப்ப பத்திரமா பாத்துக்கோங்க..!

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version