- Ads -
Home நலவாழ்வு கை துடைக்க நியூஸ் பேப்பர் வேண்டாமே!

கை துடைக்க நியூஸ் பேப்பர் வேண்டாமே!

கை துடைக்க நியூஸ் பேப்பர் வேண்டாமே!

 
 
செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்’ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள் செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்துகள் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 
 
அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவியப் பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது.
 
3.bp.blogspot.com 8Sqe 8r6dA VhKkcC4WDZI AAAAAAAAGFo ooUarSNnyvw s1600 Vadai 00991

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை. தண்ணீர்ப் பட்டால், பிரச்சனைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜிப் போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியே எடுப்பதற்கு செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 
 
காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சிலப் பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 
 
நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு இவைகள் வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சிசெய்தது ஈயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களும் அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவைகள் கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 
 
முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் கலக்கப்படுவதில்லை. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்ஸ்க்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தது. தடை செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version