- Ads -
Home நலவாழ்வு வலுவான பெண்களும்..! வலிமையற்ற ஆண்களும்..!!

வலுவான பெண்களும்..! வலிமையற்ற ஆண்களும்..!!

 

 
இது ஆண்களுக்கு கசப்பானா சங்கதியாகத்தான் இருக்கும்! இருந்தாலும் என்ன செய்ய..? உண்மை அப்படித்தானே இருக்கிறது..!!

ஆரோக்கியம் என்ற விஷயத்தில் ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டால், ஆணை விட பெண்ணே வலிமையானவள். நோய் நொடிகள் அண்டாத, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வது பெண்கள்தான். ஆண்கள் இந்த விஷயத்தில் பலவீனமானவர்கள்தான்..!

ஆணின் பலமெல்லாம் உடலுக்கு வெளியேதான். பெண்ணைவிட எல்லா விஷயத்திலும் 25 சதவீதம் கூடுதலானவன் ஆண். உதாரணத்திற்கு ஒரு ஆண் 100 கிலோ எடையை தூக்கினால், பெண்ணால் 75 கிலோதான் தூக்க முடியும். அவ்வளவுதான் அவர்கள் பலம்.

இதெல்லாம் உடலுக்கு வெளியேதான், உடலுக்குள் என்று எடுத்துக் கொண்டால், பெண்ணை அடித்துக் கொள்ளவே முடியாது. பைத்தியம், திக்குவாய், பிறவி ஊனம், காக்கை வலிப்பு போன்ற எல்லாமே பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். சராசரி ஆயுளிலும் கூட ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள்.

2.bp.blogspot.com

தாய்மை என்ற பேற்றிற்காக பெண்ணுக்கு இயற்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது.‘இம்முனோ குளோபின்’ என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதம் பெண்களின் உடலில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.

ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் ‘எக்ஸ்’, ‘ஒய்’ குரோமோசோம்களில் கூட பெண்ணினத்தை உருவாக்கும் ‘எக்ஸ்’ (X) குரோமோசோமே வலிமையையும் ஆரோக்கியமும் முழுமையான வளர்ச்சியும் கொண்டது. ஒரு பெண் உருவாக இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் தேவை.

ஆணுக்கு ஒரு ‘எக்ஸ்’ (X), ஒரு ‘ஒய்’ (Y) என்று இரண்டு குரோமோசோம்கள் தேவை. இதில் ‘ஒய்’ அரைகுறையாக வளர்ச்சியடைந்த ஒரு  குரோமோசோம். அதாவது மருத்துவ கூற்றுப்படி மூளியாக்கப்பட்ட ஒரு பெண்ணே ஆண்.

பெண் ஆரோக்கியத்திற்கு இதுதான் மிகப்பெரிய காரணம்.

மேலும், தற்காப்பு சக்தியை அதிகம் உண்டாக்கும் ‘ஹீமோபைலியா ஜிடென்ராஸ்’ என்கிற ஹார்மோன் எப்போதும் கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு செல்கிறது.

இது ஒரு போதும் தாயிடம் இருந்து ஆண் குழந்தைக்கு செல்வதில்லை. எப்படி ஆண் குழந்தையைத் தவிர்த்து, பெண் குழந்தைக்கு மட்டும் இந்த தற்காப்பு சக்தி செல்கிறது என்பது விஞ்ஞானத்திற்கே புலப்படாத புதிராக இருக்கிறது. இதனால்தான் பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்து விடுகின்றன.

உடல்  வலிமை வேறு, உடலின் எதிர்ப்புச் சக்தி வேறு. வலிமையை ஆணுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெண்ணுக்கும், இயற்கை அளித்துள்ளது. நீண்ட நாட்கள் வாழ இயலாமல், நோய்களை தாங்கிக் கொள்ளவும் முடியாத இந்த வலுவற்ற ஆண்கள், பெண்களின் வலிமையை உணர்ந்து அனுசரித்து வாழ வேண்டும் என்பதுதான் ஆண்களுக்கு இயற்கை இட்டிருக்கும் கசப்பான நியதி.

சரி, அப்படியென்றால் ஆணுக்கென்று எந்த பெருமையும் இல்லையா என்று கேட்டால்… இயற்கை இருக்கிறது என்ற பதிலைத்தான் தருகிறது. வலிமையான வெளிப்புற உடலும், வாழ்நாள் முழுவதும் உடலுறவில் ஈடுப்பட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய சக்தியும் ஆணுக்கு மட்டுமே உண்டு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்ணால் இது முடியாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version