- Ads -
Home இந்தியா விக்ரம் லேண்டருக்கு ஹலோ செய்தி அனுப்பிய நாசா!

விக்ரம் லேண்டருக்கு ஹலோ செய்தி அனுப்பிய நாசா!

dsn deep space network communications antenna pia17793

நிலவின் தரைப் பகுதியில் ஹார்ட் லேண்டிங் ஆக, வேகமாக இறங்கி நிலவின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் லேண்டருடன் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு உதவியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவும் களம் இறங்கி உள்ளது. ஆழ்ந்த விண்வெளி தொடர்பு ஆண்டனாக்கள் மூலம், லேண்டர் விக்ரமிற்கு ‘ஹலோ’ என்ற மெசேஜ் அனுப்பி உள்ளது நாசா.

ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரமைத் தொடர்பு கொள்ள நாசா முயற்சித்து வருகிறது. இஸ்ரோவின் ஒப்புதலுடன் டிஎஸ்என் எனப்படும் Deep space network மூலம் விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவகிறது நாசா.

செப்.,20, 21 தேதிகளுக்கு இடையில் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசாவின் ஆன்டனாக்கள் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு, நிலவில் இருந்து எதிரொலிக்கப்படும் அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில் உள்ளது

விக்ரம் லேண்டர் புத்துயிர் பெறுவதற்கான நம்பிக்கை 14 புவி நாட்களுக்கு நமக்கு உள்ளது. விக்ரம் லேண்டர் சூரியனின் கதிர்களைப் பெற்று உயிர்ப்பிப்பது ​​செப்டம்பர் 20-21 தேதிகளில் முடிவடையும்! அதன் பின்னர் அதன் சோலார் பேனலை உயிர்ப்பிக்கும் நம்பிக்கை நம்மைவிட்டுப் போய்விடும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version