- Ads -
Home இந்தியா ஜன.28: பஞ்சாப் கேசரி லாலா லஜபதிராய் ஜெயந்தி!

ஜன.28: பஞ்சாப் கேசரி லாலா லஜபதிராய் ஜெயந்தி!

Lala Lajpat Rai

பஞ்சாப் கேசரியாக புகழ் பெற்ற தேசிய போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பஞ்சாபிலுள்ள ஜாக்ரான் நகரில் 1865 ஜனவரி 28 ல் பிறந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி லாலா லஜபதி ராய்க்கு இன்று அஞ்சலி செலுத்தினார் . லாலா லஜபதிராய் நாட்டிற்குச் செய்த சேவைகள் மக்கள் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பவை என்றார். பாரதமாதாவின் சாகச புதல்வர், பஞ்சாப் கேசரி, லாலா லஜபதிராய் ஜெயந்தி சந்தர்ப்பத்தில் அவருக்கு சல்யூட். அவர் செய்த தியாகங்கள் என்றும் வணங்கி போற்றத் தக்கவை என்று ட்விட் செய்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் லாலா லஜபதிராய் ஒரு அசாதாரணமான தலைவர். மார்க்கதரிசி. உண்மையான தேசியவாதி என்று போற்றினார்.

1920 ஆம் ஆண்டு லாலாலஜபதிராய் தலைவராக ஆல் இந்தியா டிரேட் யூனியன் எஐடியுசி ஏற்படுத்தப்பட்டது. ஹிந்து மகாசபை, லோக் சேவா மண்டல் அமைப்புகளை ஆரம்பித்தார்.

இவர் சிறந்த எழுத்தாளர். ஆரிய சமாஜ், யங் இந்தியா, அன் ஹேப்பி இந்தியா, இங்கிலாந்து டெப்ட் டு இந்தியா போன்ற நூல்களை எழுதினார்.

சைமன் கமிஷனுக்கு எதிராக லாகூரில் நடந்த போராட்ட ஊர்வலத்தில் போலிஸார் நடத்தி தடியடியில் காயமடைந்து 1928 நவம்பர் 17 அன்று காலமானார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version