- Ads -
Home இந்தியா ஐதராபாத்தில் என்கவுண்டர் ஆன சென்னகேசவலு மனைவிக்கு பெண் குழந்தை! ராம்கோபால் வர்மா ட்வீட்!

ஐதராபாத்தில் என்கவுண்டர் ஆன சென்னகேசவலு மனைவிக்கு பெண் குழந்தை! ராம்கோபால் வர்மா ட்வீட்!

disa lady

திசா பாலியல் வன்முறை கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட கொலையாளிகளில் ஒருவனான சென்ன கேசவுலுவின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா மனதை உருக்கும் டுவிட் செய்துள்ளார்.

“சென்னகேசவுலுவின் மனைவிக்கு பெண் குழந்தை. அந்த குடும்பத்தின் மீது வன்கொடுமையின் நிழல் விழுந்துள்ளது. அந்த குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை ஆதரிக்க வேண்டும்” என்று ராம் கோபால் வர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் முடிந்தளவு நன்கொடை அளிக்க வேண்டும் என்று வங்கிக் கணக்கு விவரங்களை கூட ட்வீட்டில் வெளிப்படுத்தியுள்ளார்.

நெட்டிசன்களிடமிருந்து இதுகுறித்து இரூவித கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ராம்கோபால் வர்மாவின் கோரிக்கையை ஏற்று சிலர் அக்கவுண்டில் பணம் செலுத்தி அந்த விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். இன்னும் சிலர் “சார்! நீங்க ரொம்ப மாறிட்டீங்க” என்று காமெண்ட் செய்து அவர் எடுத்த சினிமா தொடர்பான படங்களை இணைத்துள்ளனர். ஒரு நெட்டிசன் ஒரு ரூபாய் டொனேஷன் செய்தது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் அந்த வங்கி அக்கவுண்ட் ஹைதராபாதில் உள்ள பிரகாஷ் நகர் பிரான்சை சேர்ந்தது என்று வெளிப்படுத்தியுள்ளார். நிறைய பேர் கிரேட் ஜாப் சார் என்று டிவீட்டியுள்ளனர்.

“சென்னகேசவுலுன் மனைவி பெண் சிசுவை ஈன்றுள்ளார். தாயும் சேயும் நலம். நலமில்லாத செய்தி என்னவென்றால் அவர்களின் எதிர்காலம். பாலியல் வன்கொடுமை நிழல் அவர்கள் மேல் படிந்துள்ளது. அவர்களை ஆதரிக்க வேண்டும்” என்று ராம் கோபால் வர்மா கேட்டுள்ளார்.

நாடுமுழுவதும் அதிர்ச்சியில் உறைந்த திசா வழக்கு குறித்து, பரபரப்பு விவாதங்களுக்குப் பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைப்படம் எடுக்க இருப்பது தெரிந்ததே. சம்ஷாபாத் போலீசாரோடு கூட பலரை சந்தித்து விவரங்களை சேகரித்தார். பிப்ரவரி 2 அன்று சென்ன கேசவலு மனைவி ரேணுகாவை தன் அலுவலகத்துக்கு அழைத்து பேசினார். அது பற்றி ட்வீட் செய்தார்.

மார்ச் 5 வியாழக் கிழமை மதியம் ரேணுகா பிரசவ வலியோடு மகபூப்நகர் அரசு மருத்துவமனையில் குடும்பத்தாரால் சேர்க்கப்பட்டார். வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

“நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஆண்டுக்கணக்காக நீதிமன்றத்தை புட்பால் ஆடி வருகிறார். அதனால்தான் திசா குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் என்கௌன்டர் தீர்ப்பு அளிக்கப்பட்டதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்” என்று வர்மா ட்வீட் செய்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version