- Ads -
Home இந்தியா வேளாண் துறை மேம்பாடு, விவசாயிகளுக்கான சலுகைகளுடன்… நிதி அமைச்சரின் 3ஆம் கட்ட அறிவிப்புகள்!

வேளாண் துறை மேம்பாடு, விவசாயிகளுக்கான சலுகைகளுடன்… நிதி அமைச்சரின் 3ஆம் கட்ட அறிவிப்புகள்!

nirmala sitharaman ji 3rd annct

கடந்த இரு நாட்களைப் போல், வெள்ளிக்கிழமை இன்று மாலையும், 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து, 3ஆம் கட்ட புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத், என்ற தன்னிறைவு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் கடந்த இரு நாட்களாக அறிவிப்புகளைச் செய்து வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்றும் சில அறிவிப்புகளைச் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 12ஆம் தேதி தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்; இந்த அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நாட்களில் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

அதன்படி, கடந்த இரு நாட்களாக தில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளைச் செய்தார். முதல்கட்ட அறிவிப்பில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.

2ஆம் கட்ட அறிவிப்பில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டங்களை அறிவித்தார். சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இதில் இட பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 3ஆம் கட்ட அறிவிப்பில், வேளாண்மைத் துறைக்கான சலுகைகள், விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர்.

கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது என அப்போது தெரிவித்தார்.

தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியாகின்றன. அதில், 8 விவசாய துறையை உள்கட்டமைப்பு சார்ந்ததாக இருக்கும். மற்ற 3 திட்டங்கள் விவசாய துறைக்கான அரசு முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாய துறையை சார்ந்துள்ளனர். சணல் பருப்பு உற்பத்தியில் தொடர்ந்து இந்தியா முன்னிலையில் உள்ளது. நமது விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் விவசாயிகளுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இக்கட்டான சூழ்நிலையிலும் ரபி பருவ அறுவடையை விவசாயிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஊரடங்கின் போது உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பீம யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் நிதி திட்டத்தில் ரூ.18700 கோடி பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலைய உள்கட்டமைப்புக்கு மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் குளிர்பதன வசதிகள் மற்றும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் வசதிகளை மேம்படுத்த முடியும்…. என்று கூறினார்.

நிர்மலா சீதாராமனின் 3ம் கட்ட முக்கிய அறிவிப்புகள்!

  • விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 8 திட்டங்கள்,
    நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள்
  • குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில் ஊரடங்கின் போது மட்டும் ரூ.74,300 கோடி ரூபாய்க்கு கொள்முதல் நடைபெற்றுள்ளது
  • பிரதமரின் கிஷான் நிதியில் இருந்து ரூ.18,700 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது
  • பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் ரூ.6400 கோடி வரை விவசாயிகளால் கோரப்பட்டுள்ளது
  • ஊரடங்கின் போது பாலின் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது
  • அறுவடைக்கு பிந்தையை வேளாண் தேவைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி பயன்படுத்தப்படும்
  • வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ரூ.1 லட்சம் கோடி உடனடியாக விடுவிக்கப்படும்
  • வேளாண் பொருட்கள் கொள்முதலுக்கான நேரடி மையங்களை மேம்படுத்தவும் ரூ.1 லட்சம் கோடி நிதி பயன்படுத்தப்படும்
  • ரூ.10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும்
  • நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் உள்ளூர் உணவுப் பொருட்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்
  • நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் செயல்பட உதவி செய்யப்படும்
  • ரூ.10 ஆயிரம் கோடி நிதி மூலம் சுமார் 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும்
  • மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்களும் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் பலன் அடைவர்
  • ரூ.10 ஆயிரம் கோடியில் உருவாகும் நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழகத்தின் மரவள்ளிக் கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்
  • உபியின் மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்
  • தினமும் 360 லட்சம் லிட்டர் பால் தேவை என்கிற நிலையில் ஊரடங்கின் போது தினமும் 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது
  • கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பால் சுமார் 4100 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
  • மார்ச் மாதத்துடன் அங்கீகாரத்தை இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி
  • இறால் இறக்குமதிக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • வேளாண் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • கடல் மீன் பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்பு மற்றும் வண்ண மீன் பண்ணைகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள்
  • மீன்பிடித்துறைமுகங்கள், மீன்களை பதப்படுத்தி வைக்கும் அமைப்புகள் மற்றும் சந்தைகளை மேம்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி
  • புதிய திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அளவிற்கு உயரும்
  • ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தின் மூலம் 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், ஏற்றுமதி இரட்டிப்பாகி ரூ.1 லட்சம் கோடியாக உயரும்
  • பால் வளத்துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்
  • பால் மூலமான மதிப்பு கூட்டு பொருட்கள் சார் தொழிலிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும்
  • பால் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
  • மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு
  • தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் ஆதரவுடன் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மூலிகை தாவரங்கள் பயிரிடப்பட்டு
  • தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் ரூ.13,343 கோடியில் செயல்படுத்தப்படும்
  • தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் மூலம் 100 சதவீதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்
  • தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் சுமார் 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்
  • தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் இதுவரை 1.5 கோடி மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
  • கால்நடை பராமரிப்பு உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • ரூ.4000 கோடி செலவில் 10 லட்சம் ஹெக்டேரில் அடுத்த 2 ஆண்டுகளில் மூலிகைத் தாவரங்கள் பயிரிடப்படும்
  • மூலிகைத் தாவரங்கள் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்
  • மூலிகை தாவரங்களுக்கு பிராந்திய அளவிலான மண்டிகள் அமைக்கப்படும்
  • கங்கை நதிக்கரை ஓரத்தில் 800 ஹெக்டேர் பரப்பில் தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் மூலம் மூலிகைகள் வளர்க்கப்படும்
  • தேனீ வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு மற்றும் சந்தை படுத்ததலுக்கு தேவையான கட்டமைப்புகளை அரசு உருவாக்கும்
  • ரூ.500 கோடி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும 2 லட்சம் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் பெருகும்
  • தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் அனைத்து காய்கறி, பழங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்படும்
  • ஆப்பரேசன் பசுமை திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • ஆப்பரேசன் பசுமை திட்டம் என்பது அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விநியோக சங்கிலியை உருவாக்குவது
  • அபரிமிதமான வளர்ச்சி உள்ள இடங்களில் இருந்து பற்றாக்குறை இடங்களுக்கு விவசாய பொருட்களை அனுப்பினால் 50 சதவீதம் போக்குவரத்து மானியம்
  • குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50 சதவீதம் மானியம்
  • எளிதில் அழியக்கூடிய காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு சலுகைகள் நீட்டிப்பு
  • விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்
  • சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்புகள்,வெங்காயம், உருளை ஆகிய வேளாண் பொருட்களை விவசாயிகள் அதிக இருப்பு வைக்க வழிவகை செய்யப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version