- Ads -
Home இந்தியா எச்சரிக்கை: எச்சில் துப்பினால் அபராதம்! மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம்!

எச்சரிக்கை: எச்சில் துப்பினால் அபராதம்! மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம்!

donot spit

பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. மத்திய அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் கழிவறைக்கு செல்லும் வழி மற்றும் படிக்கட்டு பகுதிகளில், புகையிலை பொருட்களை போட்டு எச்சில் துப்பி இருப்பதை காணமுடியும். அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவின் மூலம் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக , அனைத்து துறைகளுக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில்,’ மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், ‘பான் மசாலா’ மற்றும் ‘குட்கா’ போன்றவற்றை பயன்படுத்தும் நிலையில், அலுவலக பகுதிகளில் எச்சில் துப்பக் கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, அபராதம் விதிக்க வேண்டும்.இதற்கான நடைமுறைகளை, சட்ட அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முடிந்தவரை, வீட்டில் இருந்து பணியாற்றுவதை பின்பற்ற வேண்டும், அலுவலகங்கள், கடைகள், சந்தைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், உடல் வெப்ப பரிசோதனை ஆகியவற்றை, பணியாளர்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், பணியிடம், மதிய உணவு அருந்துமிடம் உள்ளிட்டவற்றில், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்,’இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version