- Ads -
Home இந்தியா மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் பரபரப்பு! திடீரென்று மயக்கம் போட்டுவிழும் மக்கள்… கூச்சல்…. பரபரப்பு!

மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் பரபரப்பு! திடீரென்று மயக்கம் போட்டுவிழும் மக்கள்… கூச்சல்…. பரபரப்பு!

hyderabad-da

மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் மக்கள் இருந்தாற்போல் இருந்து திடீரென்று தலை சுற்றி கீழே விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு மூன்று பேர் சனிக்கிழமை 10 பேர் என்று தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் பெண்கள் பெரியவர் சிறியவர் என்று அனைவருமே மயக்கம் போட்டு விழுந்து மூர்ச்சை வியாதிக்கு உள்ளாகி உள்ளார்கள். திடீரென்று ஏற்பட்ட இந்த சூழலில் இதுவரை 18 குழந்தைகளுக்கு மேல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.

ஏலூரில் உள்ள தக்ஷிணை வீதி, கிழக்கு வீதி, அசோக் நகர், அருந்ததி பேட்டை போன்ற இடங்களில் மக்கள் இருந்தாற் போலிருந்து தலை சுற்றிக் கீழே விழுவதும் வாந்தி எடுப்பதும் நுரையோடு கூடிய மூர்ச்சை வியாதி போன்ற இயல்புகளோடு சனிக்கிழமை மதியத்திலிருந்து அரசாங்க மருத்துவமனையில் வந்து சேர்ந்துள்ளார்கள். அங்கிருக்கும் படுக்கைகள் எல்லாம் நிரம்பி வரண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில மருத்துவ ஆரோக்கிய துறை அமைச்சர் ஆள்ள நானி உடனுக்குடன் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்தார். இந்த விந்தையான நோய்க்கு ஆளானவர்ளை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் நேரம் ஆக ஆக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கவலை அளிப்பதாக உள்ளது.

திடீரென்று தலை சுற்றி கீழே விழுவதால் அடிபட்டவர்கள் ஒருபுறம்… வாந்தி… நுரையோடு கூடிய மூர்ச்சை வியாதியால் அவஸ்தைப்படுபவர்கள் ஒருபுறம்… விந்தையான குரலில் கூச்சலிடுவது ஒருபுறம்… என்று நிலைமை அனைவரையும் பரபரப்புக்கு ஆளாக்கியுள்ளது.

மேற்கு வீதியில் மருத்துவ ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆரோக்கிய சர்வே நிர்வகித்து வருகிறார்கள். அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அமைச்சர் ஆள்ள நானி விசாரித்து விவரங்களை கேட்டு அறிந்துகொள்கிறார். அனைவருக்கும் மேலான மருத்துவம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்களை நானி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சேர்ந்த நோயாளிகளில் பலர் விந்தையான குரலில் கத்துவதும் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிகிச்சை பெற்றவர்களில் கவலைக்கிடமானவர்களை விஜயவாடா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஒரேயடியாக இத்தனை பேரின் ஆரோக்கியமின்மைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

ஒருவேளை குடிநீரில் கலப்படம் உள்ளதா என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version