- Ads -
Home இந்தியா திருப்பதி; டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கப் போகுதாம்!

திருப்பதி; டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கப் போகுதாம்!

ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு பதில் 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தாளம் முடிவு செய்துள்ளது

1719060 tirupatitemple 1

திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு பதில் ‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தாளம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீரபிரம்மம் கூறியதாவது…

திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சேவை டிக்கெட் பிரசாதம், அகர் பத்திகள், பஞ்சகவ்ய பொருட்கள், டைரி, காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக, ‘போன் பே. ஜி பே, கியூஆர் கோடு ஸ்கேனர், டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவஸ்தானத்துடன் இணைந்த கோவில்களில் பக்நர்களுக்கு பணப் பரிவர்த்தனைக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாகவும் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பக்தர்கள் அதிகம் செல்லும் முக்கிய இடங்களில் தேவஸ்தான கோவில்கள் பற்றி தெரிவிக்க தகவல் பலகைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதனால் பக்தர்கள் எளிதாக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியும்… என்றும் கூறினார்.

இதனிடையே சென்னையிலிருந்து திருப்பதிக்கு அதிக அளவிலான பக்தர்கள் சென்று வருவதால் தற்போது கவனமாகியுள்ள வந்தே பாரத் ரயில்களை சென்னையிலிருந்து திருப்பதிக்கு இயக்குவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னை திருப்பதி ரயில் பாதையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும் என்பதால் வந்தே பாரத் செயல்களை இயக்குவதற்கு பரிந்துரைத்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version