- Ads -
Home இந்தியா குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

#image_title
modyin guarantee
#image_title

சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் என்ற மைல்கல் மூலம் உத்வேகம் பெற குடிமக்களுக்கு மோதிஜி விடுக்கும் அறைகூவல்

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

கேள்வி –2024 உங்கள் இலக்கு அல்ல 2047 தான் என்று நீங்கள் பல மேடைகளில் முழங்கியிருக்கிறீர்கள்.   அப்படியென்றால் 2047ற்கு உள்ளாக என்ன நடக்கவிருக்கிறது?  மேலும் இந்தத் தேர்தல் உபசாரரீதியாக மட்டுமே கொள்ளக்கூடிய ஒரு தேர்தலா?

பதில் – என்னுடைய கருத்துப்படி 2047ஐ, மேலும் 2024ஐ, இரண்டையும் கூட, ஒன்றாக்கக் கூடாது இரண்டுமே வேறுவேறு.  நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

அப்போதிலிருந்து, ஓரிரண்டு ஆண்டுகள் முன்பாக.   நான் என்ன கூறினேன், என்றால், 2047இன் போது, தேசம் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகியிருக்கும்.  இயல்பான வகையிலே, இப்படிப்பட்ட மைல்கற்கள், ஒருவகையிலே, புதிய உற்சாகமேற்படுத்துகின்றன புதிய உறுதிப்பாடுகளுக்கு மனிதர்களை தயார் செய்கிறது.   

அந்த வகையிலே இதை நான் ஒரு,  வாய்ப்பாகப் பார்த்தேன்.   75 ஆண்டுகள் ஆன நிலையில் இருக்கிறோம், 100ஐ எட்ட இருக்கிறோம், இந்த 25 ஆண்டுகளைச் சிறப்பான வகையிலே எப்படி பயன்படுத்தலாம்?   ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இலக்கை ஏற்படுத்த வேண்டும்.   சரி நான் ஒரு கிராமத்தலைவர் என்றால், 2047க்குள் என் கிராமத்தில் குறைந்த பட்சம் இதைச் செய்வேன்.  

ஆர்பிஐயின் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்….. 90 ஆண்டுகள் நிறைவடைந்த வேளையில்.   அப்போது கூறினேன் இந்தப் பத்தாண்டுகள் மிக முக்கியமானவை.   உங்களுடைய நூற்றாண்டினைப் பற்றி, நீங்கள் இப்போதே சிந்தியுங்கள்!   ஆக என்னுடைய மனதிலே 2047 என்பது, இது பாரத சுதந்திரத்தின் 100 ஆண்டுகள்.   மேலும் தேசத்திலே….. ஒரு உத்வேகம் விழித்தெழ வேண்டும்.  

சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் என்பதே கூட மிகவும் உத்வேகம் அளிக்கும் தருணம்.   எந்த ஒரு தனிப்பட்ட விஷயமும் இல்லை.  ஒரு பகுதி நிறைவானது.  அடுத்து 2024 பற்றியது. 

2024 என்பது நம்முடைய தேர்தல் தொடரிலே, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதை ஒட்டி வரக்கூடிய ஒரு விஷயம். என்னைப் பொறுத்த மட்டிலே தேர்தல்கள் என்பவை முற்றிலும் வேறுபட்டவை.  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version