- Ads -
Home இந்தியா வஜ்ரா பீரங்கியில் அமர்ந்து கம்பீரமாக உலா வந்த மோடி!

வஜ்ரா பீரங்கியில் அமர்ந்து கம்பீரமாக உலா வந்த மோடி!

modi in tank

இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ள கே-9 வஜ்ரா பீரங்கி வாகனத்தை பிரதமர் @narendramodi நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

வஜ்ரா வாகனத்தில் ஏறி அமர்ந்து ஆய்வுப் பாதையில் சிறிது தொலைவுக்கு சென்றார்.

பின்னர் இது குறித்து அவர் தெரிவித்த போது, எல்.அண்ட் டி.,யில் இந்த டாங்க் தயாரிப்பில் உழைத்த குழுவினர் அனைவரையும் தாம் மனமுவந்து பாராட்டுவதாக மோடி கூறியுள்ளார். நாட்டைப் பாதுகாக்க தனித்துவமான அமைப்புடன் பாதுகாப்புத் துறையில் ஈடுபடுத்தப்படும் வஜ்ரா கே 9 சிறப்பான சேவை செய்யும் என்று கூறியுள்ளார் மோடி.

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஹசிரா என்ற இடத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தின் பீரங்கி தயாரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். அப்போது அங்கிருந்த கே9 வஜ்ரா பீரங்கியில் ஏறி சிறிது தூரம் பிரதமர் பயணித்தார்.

இது குறித்துக் கூறிய மோடி, பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் நிறுவனமும் இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய ராணுவத்திற்கு கே9 வஜ்ரா என்ற ரகத்தை சேர்ந்த 100 பீரங்கிகளை 42 மாதங்களில் தயாரித்து வழங்க 2017 ஆண்டும் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத் தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version