- Ads -
Home இந்தியா அமேதி தொகுதியில்… தீயணைக்கும் பணியில் நேரடியாகக் களத்தில் இறங்கிய ஸ்ம்ருதி இரானி!

அமேதி தொகுதியில்… தீயணைக்கும் பணியில் நேரடியாகக் களத்தில் இறங்கிய ஸ்ம்ருதி இரானி!

smiriti irani

லக்னௌ: தான் பிரசாரத்தில் இருந்த போது, அமேதி தொகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் நேரடியாகக் களமிறங்கி உதவி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றார் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எதிராக கடும் போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்மிருதி இரானி, இன்று செய்த ஒரு செயல் தொகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார் ஸ்மிருதி இரானி. ஆனால் இந்த முறை அமேதியில் உறுதியாக வெற்றிபெறுவேன்; காரணம், தொகுதிக்குச் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை அமேதி மக்களுக்குச் செய்துள்ளேன். அம்மக்களுடன் ஒன்றாகக் கலந்துள்ளேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்மிருதி இரானி.

இன்றும் அதே போல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ஸ்மிருதி இரானி. அப்போது தவாரா என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிராம மக்கள் பதறி அடித்து ஓடினர். தீயணைப்பு வாகனங்கள் பரபரப்பாக போராடி தீயணைப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானி அங்கே வந்தார். சற்றும் நேரம் கடத்தாமல் உடனே அடிபம்பில் நீர் அடித்து தானும் தீயணைக்க நீர் எடுத்து தருவது, தீயணைப்பில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது என்று சுறுசுறுப்பாகப் பணியாற்றினார். இதனைக் கண்டு அந்த கிராமத்தின் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஸ்மிருதி இரானியின் அன்பைக் கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version