- Ads -
Home இந்தியா ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்: 15 நாளில் பதிலளிக்க உத்தரவு!

ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்: 15 நாளில் பதிலளிக்க உத்தரவு!

rahul gandhi 24

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு, 15 நாட்களில் உரிய பதிலளிக்கும் படி உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுப்ரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்திருப்பதாக தெரிவித்தார். கடந்த 2003இல் இங்கிலாந்தில் பேக்டிராப் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி இருந்துள்ளார் என்றும், அந்நிறுவனத்தின் 83% பங்குகளை அவர் வைத்திருப்பதாவும் சு.சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களில் ’51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர், ஹாம்ப்ஷேர் SO23 9EH’ என்ற முகவரியுடன் தன்னை இங்கிலாந்து குடிமகன் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

சுப்பிரமணிய சுவாமி கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார்.பல மேடைகளிலும் இது குறித்து பேசியுள்ளார். இருப்பினும், மக்களவை தேர்தல் நேரத்தில், இவர் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனை அடுத்து, இந்தப் புகார் தொடர்பாக, உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இரட்டைக் குடியுரிமை புகார் குறித்து தனது நிலைப்பாட்டை ராகுல் விளக்க வேண்டும்! 15 நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version