- Ads -
Home இந்தியா ஆம் ஆத்மியின் இலவச அறிவிப்பு! பெண்கள் இனி ரயில், பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!

ஆம் ஆத்மியின் இலவச அறிவிப்பு! பெண்கள் இனி ரயில், பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!

03 Sep25 metro

நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து அடுத்த கட்ட வெற்றிக்கு என்ன வழி என்று யோசித்து வருகிறார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
தொடர்ந்து சட்டசபை தேர்தல் அடுத்து நடைபெற உள்ளது. இதனால் ஏதாவது இலவச அறிவிப்புகளைச் செய்து, வாக்குகளைக் கவர யோசித்து வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

இதன் ஒரு பகுதியாக அவரது இலவச அறிவிப்பு வெளியாகியுள்ளது. தில்லியில் பெண்கள் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அவர் அறிவித்துள்ளது இப்போது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

கட்டணம் அதிகம் என்பதால், எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் அளவுக்கு வசதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், இந்த வாய்ப்பு தேவைப்படும் பெண்களுக்கு சலுகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்தால் தில்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் அந்த அறிவிப்பிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version