- Ads -
Home இந்தியா பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்ரீகள் விரைவில் திரும்ப அறிவுறுத்தல்!

பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்ரீகள் விரைவில் திரும்ப அறிவுறுத்தல்!

01 July03 Amarnath Yatra

ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரையை விரைவில் முடித்துக் கொண்டு அவரவர் இடங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை அமைப்பினர் கொடுத்துள்ள தகவலின்படி பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  எனவே பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருவதால் ஜம்மு காஷ்மீரில் கூடுதல் படையினர் குவிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளின் முக்கியத் தாக்குதல் இலக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் இருக்கலாம் என்று கூறப்படுவதால் அது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும், எனவே காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக நேரம் இவர்கள் தங்கியிருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு விரைவில் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும்  ஜம்மு காஷ்மீர் அரசின் சார்பில் உள்துறை செயலர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே காஷ்மீருக்கு கூடுதல் படையினர் அனுப்பப் பட்டுள்ள நிலையில், காஷ்மீர் சிவில் செக்ரட்டரி கொடுத்துள்ள இந்த அறிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து, அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் ராணுவ முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களாக அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரையுடன் கூடிய கண்ணிவெடியும், குறிபார்த்து சுட உதவும் எம் 24 ரக அமெரிக்கன் ஸ்னிப்பர் ரைஃபிளும் இருந்ததை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதை அடுத்தே உடனடியாக அமர்நாத் யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் தங்களின் வீடுகளுக்குத் திரும்பும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட நாட்டு ஊடகங்களில் செய்தி ஒளிபரப்பானது.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவிற்கு இன்னமும் இந்திய ராணுவத்தின் மீதுதான் சந்தேகமாம்..! இதற்கு ஒரு படி மேலே போய் இந்திய அரசு மக்களைவிட நிலப்பரப்பிற்குதான் முக்கியத்துவம் கொடுப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இத்தனைக் காலமாக காஷ்மீரின் இரு கட்சிகளும் பயங்கரவாதத்தை பகிரங்கமாக வைத்து வளர்த்துக் கொண்டு.. பாகிஸ்தானை ஆதரித்துக் கொண்டு செய்து வந்த அரசியலில்.. தற்போது தடங்கல் வந்துள்ளது என்பதால் அவர்கள் பதைபதைக்கிறார் என்று கூறுகின்றனர் காஷ்மீரின் தேசியவாதிகள்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version