- Ads -
Home கிரைம் நியூஸ் பெட்ரோல் ஊற்றி மனைவியை கொன்ற கணவன்!

பெட்ரோல் ஊற்றி மனைவியை கொன்ற கணவன்!

fire bath 2

சிவகாசி தேவிகிருபா நகர் பகுதியில் வசித்து வந்தவர் பாண்டியன். இவர் அச்சகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் இதுவரையில் குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சினை வந்துள்ளது.

இவ்வாறு நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதம் பெரும் பிரச்சினையாக வெடித்த நிலையில் சிறிது நேரத்தில் வித்யா அலறிதுடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அங்கு பார்த்தபோது வித்யா தீயில் எரிந்த நிலையில் கதறிக் கொண்டிருந்தார்.

உடனே அவர்கள் தீயை அணைத்து, வித்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இறப்பதற்கு முன்பு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில் வித்யா, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எனது கணவர் பாண்டிதான் என் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version